Cinema
“உதயநிதி அமைச்சராவது குறித்து பேச எந்த எதிர்க்கட்சிகளும் தகுதி கிடையாது..” - இயக்குநர் அமீர் ஆவேசம் !
பிரபல இயக்குநர் அமீர், தற்போது ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு நேற்று இயக்குநரும், நடிகருமான அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட மாடலும், தமிழ் தேசியமும் தமிழகத்தில் வேரூன்றி தான் இருக்கிறது என்று அரசியல் ரீதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நச்சென்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "குஜராத்தில் ஆளும் கட்சி தான் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அங்கு முறையான தேர்தல் நடக்கவில்லை. இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது ஒரு தேர்தல் யுக்தி. இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அவர்கள் திட்டம் போடமலையா புதிய நாடாளுமன்றம் கட்டுகிறார்கள்.
கோவையில் நடந்தது குண்டு வெடிப்பு அல்ல; அது ஒரு சிலிண்டர் வெடி என்பதையே காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் NIA விசாரணையும் நடைபெற்று வருகிறது. பத்திரிகையாளர் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். தமிழக அரசும், காவல்துறையும் அந்த வழக்கை சரியாக கையாண்டிருக்கிறது.
பாஜகவை பொறுத்தவரையில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை பயங்கரவாதிகளாக காட்டினால் தான், அவர்கள் ஓட்டு வாங்க முடியும். பாஜக இந்து தேசம் என்ற ஒற்றை கோட்பாட்டுடன் பயணிக்கிறது. ஆனால் அது சாத்தியமாக வாய்ப்பே இல்லை. திராவிட மாடலும், தமிழ் தேசியமும் தமிழகத்தில் வேரூன்றி தான் இருக்கிறது. அதனால் தான் இங்கு இந்துத்துவா எடுபடவில்லை.
உதயநிதி அமைச்சர் ஆவது குறித்து எந்த எதிர்க்கட்சிகளும் பேச தகுதி கிடையாது. அவர் அமைச்சராவது மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்தியா பெருமுதலாளிகளுக்கான நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு டோல் கேட்டிற்கு அதிக அளவு பணம் வசூலிக்கிறார்கள். அந்த பணத்தை கையில் கொடுத்தாலும் வாங்குவதில்லை; paytm போன்ற செயலி மூலமே பண பரிவர்த்தனை செய்ய சொல்கிறார்கள். இந்த நாடு பெருமுதலாளிகளுக்கான நாடாக மாறிக்கொண்டிருக்கிறது" என்றார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!