Cinema
பருத்திவீரன் 2 : “ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்க.. எங்க இருந்து கூட்டி வாறது..” - இயக்குநர் அமீர் கலகல!
பிரபல இயக்குநர் அமீர், தற்போது ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு நேற்று இயக்குநரும், நடிகருமான அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பருத்திவீரன் அடுத்த பாகம் குறித்த கேள்விக்கு, 'பருத்திவீரன் 2' வராது என்று கலகலப்பாக பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாலா இயக்கத்தில் இருந்து சூர்யா விலகிய உண்மையில் 'வணங்கான்' படம் தொடங்கியதும் தெரியாது; அது drop ஆனதும் தெரியாது. தெரியாத ஒன்றை பற்றி கருத்து சொல்வது அநாகரீகம். இயக்குநர் பாலாவுக்கு நான் ஒரு நல்ல நண்பன், அவருடன் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளேன்.
அதே போல் சூர்யாவை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்று பொதுவெளியில் பேசிவிட்டார்கள். எனவே அதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.
இயக்குநர் பாலா ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநர். அவரை பற்றி தெரிந்து தான், தயாரிப்பாளர்கள் படத்திற்கு ஒப்புக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் வரும் கருத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வெற்றிமாறனனின் விடுதலை படத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்து போன சண்டை பயிற்சியாளர் வீட்டிற்கு சென்று அவர் துக்கம் விசாரித்தார். மேலும் அவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்குவோம் என்றும் என்னிடம் தெரிவித்தார்.
ஹாலிவுட் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பாதுகாப்புகள் இன்னும் இல்லை. ஏனென்றால் இது ஒரு சின்ன துறை தான். இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது திரைத்துறை சார்ந்த சங்கங்களும், ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கங்களும் தான்” என்றார்.
தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் அடுத்த பாகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பருத்திவீரன் படத்தில் பருத்திவீரன், முத்தழகு ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்க.. அவர்களை எங்கே இருந்து கூட்டி வாறது? இது என்ன முனி படமா பார்ட் 1, 2, 3 என்று எடுக்க. பருத்திவீரன் 2 வராது” என்று கலகலப்பாக தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!