Cinema
’ரஜினி ஊரில் இல்லை.. எல்லாரும் வீட்டுக்குப் போங்க’ : முகம் வாடிய ரசிகர்கள் கூட்டம் !
தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் தவிர்க முடியாத முகமாக இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு பேருந்து நடத்துநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகராக உயர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த்.
160 க்கும் மேற்பட்ட நடங்களை நடித்துள்ள நடிகர் ரஜினிக்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஒரு ரசிகர்கள் பட்டாலமே உள்ளது. இப்போதும் அவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. வயதானாலும் இன்னும் மாஸ் குறையாத நடிகராகவே உள்ளார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இன்று தனது 73 ஆண்டு பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சக நடிகக்ரள், ரசிகர்கள் என பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எப்போதும் தனது பிறந்த நாள் அன்று தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்து பெறுவது நடிகர் ரஜினியின் வழக்கம். அந்த வகையில் இன்று காலையிலிருந்தே சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரசிகர்கள் கூடினர்.
நடிகர் ரஜினி வந்து தங்களுக்குக் காட்சி தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். மேலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அவரை பார்ப்பதற்காக கொட்டும் மழையிலும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் ரஜினி வராமல் அதற்குப் பதில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வெளியே வந்து :ரஜினி சார் ஊரில் இல்லை. அவர் சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறினார். இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் ஏக்கத்துடன் கண்ணீர் மல்கக் காத்திருந்து விட்டு அங்கிருந்து நடந்து சென்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!