Cinema
துணிவு : BANK கொள்ளை சம்பவம் குறித்த கதையா.. யாரு சொன்னா ? - எச்.வினோத் அளித்த விளக்கம் என்ன ?
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சில தோல்வியை தழுவினாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் ரசிகர்களால் தூக்கி விடும். இதனாலே இவர் இன்றும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்டாராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் பல கேளிக்கையான விஷயத்தை செய்து வந்தனர். இருப்பினும் இந்த படத்தில் அப்டேட்-ஐ படக்குழுவினர் ரகசியமாகவே வைத்திருந்தனர். எனினும் படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
முன்னதாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது. அதன்படி தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் 'துணிவு'.
இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதும் என்று திரைவட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' வரும் 9-ம் தேதி வெளியாகும் என அப்படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருந்தன. அந்த வகையில் நேற்று இப்படத்தின் 'சில்லா சில்லா' பாடல் வெளியானது.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த படத்தின் கதை வெளியே வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இப்படத்தின் இயக்குநர் எச். வினோத் தனியார் ஊடாகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், "இது பஞ்சாப் பேங்க் கொள்ளை குறித்த படம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறு. இந்த படத்தின் கதை முழு கற்பனை மட்டுமே" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த படத்தில் அஜித்துக்கு ஒரு சீனில் கூட டூப் இல்லை. அஜித் டூப் போடாமல் நடித்தபோது, சண்டை காட்சி ஒன்றில் அவரது கால் வீங்கி விட்டது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து 55 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இதில் ரசிகர்கள் வேறு அஜித்தை தான் பார்ப்பார்கள். நெகடிவ் விமர்சனங்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதை அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு நல்ல அனுபவம்" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!