Cinema
காந்தாரா முதல் The Kashmir Files வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட Top 10 படங்கள் பட்டியல் வெளியீடு
ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள் பட்டியல் வெளியிடப்படும். அப்படி முதலில் இருப்பது முடியப்போகும் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர் என திரை சார்ந்து இருப்பதே ஏராளம்.
அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்தாண்டில் Google ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ரன்வீர் சிங், அலியா பட் நடிப்பில் வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2022-ல் Google ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தமிழ் பட பட்டியல் இதோ !
1. பிரம்மாஸ்திரா (இந்தி)
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், அமிதாப் பச்சான் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடிப்பில் வெளியான இப்படம் இந்தியாவில் வெளியான Fantasy திரைப்படம். 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 431 கோடி வரை வசூலித்தது.
2. KGF - 2 (கன்னடம்)
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியான இப்படம் ஒரு ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கபட்ட இப்படம் 1250 கோடி வரை வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிசில் பெரிய ஹிட் கொடுத்துள்ளது.
3. தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தி)
விவேக் அக்நிஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி, அனுப்பம் கேர், தர்ஷன் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரூ.340.92 வசூலித்துள்ளது. இப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் பெரிய சர்ச்சைக்குரிய படம் என்று பெயர் வாங்கியுள்ளது.
4. RRR (தெலுங்கு)
தெலுங்கு பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் NTR, ராம் சரண் நடிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ₹1,200 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
5. காந்தாரா (கன்னடம்)
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் வெறும் 16 கோடியிலேயே எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த படம் ஹிட் அடித்து 400.90 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. தமிழில் பெரிய அளவில் இந்த படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், மக்களால் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் இதுவும் ஒன்று
6. புஷ்பா - 1 (தெலுங்கு)
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான இப்படத்தில் நடிகை சமந்தா சோலோ சாங் ஒன்றிற்கு ஆடியுள்ளார். இது உலக அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. 170–250 பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 373 கோடி வரை வசூலித்துள்ளது. இதன் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7. விக்ரம் (தமிழ்)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.420-500 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் ஓடிடி உரிமையை 'Disney+' கைப்பற்றியுள்ளது. மார்வெல் யுனிவர்ஸ் போல், லோகேஷ் யுனிவர்ஸ் என்ற புதிய கோணத்தில் விக்ரம் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கைதி 2 அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.
8. லால் சிங் சத்தா (இந்தி)
இயக்குநர் அத்வைத் சந்திரன் இயக்கத்தில் அமீர் கான், நாக சைதன்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் ஹாலிவுட் படமான 'Forrestgump' படத்தின் ரீ-மேக் ஆகும். 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 129.64 மட்டுமே வசூலித்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
9. த்ரிஷ்யம் 2 - (இந்தி)
இயக்குநர் அபிஷேக் பதக் இயக்கத்தில் அஜய், ஸ்ரேயா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான இப்படம் ₹50 பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வசூல் 278.6 கோடி வரை பெற்றுள்ளது.
10 - Thor: Love and Thunder (ஹாலிவுட்)
ஹாலிவுட் இயக்குநர் தைக்கா வைத்திதி இயக்கத்தில் கிறிஸ் ஹேம்ஸ்வர்த்நடிப்பில் வெளியான இப்படம் ஆங்கில படமாகும். இது இந்தியாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் மார்வெல் யுனிவெர்சில் Thor முக்கிய கதாபாத்திரமாக அமைத்துள்ளது. உலகளவில் வெளியான இப்படம் 250 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வசூல் 761 மில்லியன் டாலர் பெற்று சாதனை படைத்துள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!