Cinema
திரையரங்கில் மீண்டும் வெளியாகிறது தெலுங்கு 'அசுரன்': ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் -என்ன விசேஷம் தெரியுமா?
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சுவாரியர், அம்மு அபிராமி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தான் 'அசுரன்'. கடந்த 2019-ல் தமிழ்நாட்டில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனால் இப்படத்தை தெலுங்கு மொழியில் இயக்குநர் ஸ்ரீகாந்த் அத்தலா 'நரப்பா' என்ற பெயரில் ரீ-மேக் செய்தார். இந்த படத்தில் தனுஷ் நடித்த காதபத்திரத்தில் தெலுங்கு ஸ்டார் வெங்கடேஷ் நடித்துள்ளார். தமிழ் போல, தெலுங்கிலும் இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று எண்ணி, திரையரங்கில் வெளியாக காத்திருந்த இந்த படம், கொரோனா காரணமாக தள்ளிபோடப்பட்டது.
தொடர்ந்து திரையரங்குகள் திறக்காத நிலையில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. இப்படம் தெலுங்கிலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், இப்படம் திரையரங்கில் வெளியாகாதது நடிகர் வெங்கடேஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தது.
இந்த நிலையில் இந்த படத்தை தியேட்டர்களில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டம் போட்டிருந்தனர். அதன்படி நடிகர் வெங்கடேஷின் பிறந்தநாளான வரும் டிசம்பர் 13-ம் தேதி இந்த படம் திரையரங்கில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. வெங்கடேஷ் தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்தாண்டு பிறந்தநாளில், இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.
முன்னதாக நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த அக்டோபர் 23-ம் தேதி அவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'பில்லா' படம் தெலுங்கு திரையரங்கில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!