Cinema
வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விபத்து.. படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பலி !
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரபல நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்கி வரும் இந்த படத்தின் கதையானது தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை உருவாக்கிய நிலையில், இந்த படத்திற்காக நடிகர் சூரி 6 பேக் வைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் வெற்றிமாறனின் 'வட சென்னை ' போல் இரண்டு உருவாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் அருகே இருக்கும் ஊனமாஞ்சேரி பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக ரோப் கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இப்படத்தின் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் (வயது 59) என்பவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி தற்போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைபடக்குழுவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு கமலின் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போதும் இதே போல் சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது. அப்போது நடந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் மது மற்றும் தயாரிப்பில் உதவியாக இருந்த சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?