Cinema
சென்னை மாநகராட்சி சார்பில் குறும்படம்: குப்பைகளை பிரித்து கொடுக்கும் தூய்மை பணியாளராக நடிக்கும் யோகி பாபு
சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் குறும்படத்தில் நடிகர் யோகி பாபு குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் தூய்மை பணியாளராக நடிக்கிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு தமிழில் வெளியான 'யோகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபு. அது இவருக்கு கைகொடுக்க, திரை வட்டாரத்தில் யோகி பாபு என்று அழைக்கப்பட்டு வருகிற. அதன்பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 'யாமிருக்க பயமே' படத்தில் 'பன்னி மூஞ்சுவாயனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்த இவர், முதல் முறையாக 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நயன்தாரவுக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அது மாஸ் ஹிட் கொடுக்க, அதன்பின்னர் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மண்டேலா' படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் 'சிங்கார சென்னை 2.O' திட்டம் மூலம் சென்னை மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு வருகிறது. மேலும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதற்காக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி சென்னையில் குப்பைகளைச் சேகரித்து வரும் உர்பேசர் ஸ்மித் (urbaser sumeet) என்ற நிறுவனம் தற்போது மக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த குறும்படத்தில் நடிகர் யோகி பாபு தூய்மை பணியாளராக நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் நடிகர் யோகி பாபுவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த படம் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குறும்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பில் முழுக்க முழுக்க பிசியாக இருக்கும் இவர், தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் 'ஓ மை கோஸ்ட்', 'அந்தகன்', 'சதுரங்க வேட்டை 2', 'வாரிசு', 'ஜவான்' உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்