Cinema
கொட்டும் மழையிலும் வசூல் வேட்டை செய்யும் LOVE TODAY: வெறும் ஒரு வாரத்தில் இத்தனை கோடியா?-வியப்பில் மக்கள்
அண்மையில் வெளியான LOVE TODAY திரைப்படம் தமிழ்நாட்டில் கொட்டும் மழையிலும் வசூல் வேட்டை செய்து தமிழ் சினிமாவில் நீங்கா சாதனை செய்து வருகிறது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், இவரே நடித்து வெளியான திரைப்படம் தான் 'LOVE TODAY'. காதநாயகனாக அறிமுகமான இந்த படத்தில் இவருடன் சேர்ந்து இவானா, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
இன்றைய தலைமுறையின் காதல் பற்றி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், அவரது பாணியில் புது கண்ணோட்டத்துடன் இயக்கியுள்ளார். நகைச்சுவை, சென்டிமெண்டுடன் கதை அழகாக நகரும் இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்கில் வெளியானது. குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே வெளியான இப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நல்ல ரிவியூ கொடுத்ததால், அடுத்தடுத்து திரை ரசிகர்கள் இப்படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டாக பார்த்து வருவதால், குறைந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த இப்படத்தை பல திரையரங்குகள் வாங்கி திரையிட்டனர். தற்போது வரை 600 ஸ்கிரீனில் திரையிடப்பட்டு வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் மொத்தம் ரூ.6 கோடி வசூலித்தது; தமிழ்நாடு அளவில் ரூ.4 கோடி வசூல் செய்தது.
நாளுக்கு நாள் தினசரி வசூல் கூடும் நிலையில், தற்போது இப்படம் வெளியாகி நேற்றுடன் 8 நாட்கள் ஆகும் நிலையில், உலக அளவில் ரூ.52.15 கோடியும், தமிழ்நாடு அளவில் ரூ.37.85 கோடியும் வசூல் வேட்டை செய்துள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.18 கோடி தான். ஆனால் இதன் தற்போது வசூல் ரூ.37.85 கோடியை தாண்டியுள்ளது. கொட்டும் மழையிலும் தற்போது தீவிர வசூல் வேட்டை செய்து வரும் இப்படம் மேலும் வசூல் செய்யப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதால், இதனை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!