Cinema
ஆடை சர்ச்சை: “நீங்க அப்படி பேசுனது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..” -சதீஷை ரவுண்டு கட்டிய தர்ஷா குப்தா
சன்னி லியோன், தர்ஷா குப்தா ஆடைகளை ஒப்பிட்டு பொது மேடையில் பேசிய நடிகர் சதீஷ், தர்ஷா தான் தன்னை அப்படி பேச சொல்லியதாக கூறியதற்கு தர்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சதீஷ். மிர்ச்சி சிவாவின் 'தமிழ் படம்' என்ற படத்தில் பாண்டியனாக தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், மதராசபட்டினம், வாகை சூடவா, எதிர் நீச்சல், கத்தி, ஆம்பள, ரெமோ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனுக்கு காமெடி நண்பராக நடித்து பிரபலமானார்.
அண்மையில் வெளியான 'நாய் சேகர்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர், சன்னி லியோன் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தாவின் ஆடைகளை ஒப்பிட்டு கிண்டலடிக்கும் விதமாக பேசினார். அப்போது நடிகர் சதீஷ் பேசுகையில், "நடிகை சன்னி லியோன் மும்பைல இருந்து நமக்காக தமிழ்நாட்டுக்கு வந்துருக்காங்க அவங்க எப்படி ட்ரெஸ் பன்னிருக்காங்க-னு பாத்தீங்க... கோயம்பத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா... சும்மா சொன்னேன்" என்று தர்ஷா குப்தா அணிந்து வந்த ஆடையை கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, நவீன், சின்மயி என முக்கிய திரை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பலரும் இவரது பேச்சு தவறு என்று சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சதீஷ் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், "தர்ஷா குப்தா தான், என்னைப் பாருங்க.. நான் சன்னிலியோன் போன்று மாடர்னா டிரஸ் போட்டு வந்துருக்கேன். சன்னி லியோன் எப்படி வருவார் எனப் பாப்போம் என்றார். ஆனால் சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்தாங்க. இதனால் தான் அப்சட் ஆகிட்டதாகவும் இதனை மேடையிலும் என்னை அவங்க சொல்ல சொன்னாங்க.." என்றார்.
ஆனால் சதீஷின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த நடிகை தர்ஷா, சதீஷை கண்டித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இதை நானா மேடையில் சொல்ல சொன்னேன். பிரச்சினையை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? யாராவாது என்ன பத்தி மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்வாங்களா? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ கஷ்டமா இருந்துச்சி, ஆனால் நான் அதை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது சரியில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தற்போது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடை சுதந்திரம் என்பது பெண்களுக்கு உரிய உரிமையாகும். அதனை பொது வெளியில் மட்டம் தட்டி பேசுவது அநாகரீக செயலாகும் என பலரும் சதீஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!