Cinema

ஆங்கில மொழியில் வெளியானது வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' - குவியும் வாழ்த்துகள் !

கவிஞர் வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நூல் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பில் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளிஈடு செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நூல் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

தமிழ் கவிஞர்களில் நீங்க முடியாத இடத்தை பிடித்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் கவிதை, நாவல் என மொத்தம் 37 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது கைவண்ணத்தில் வெளியான 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' நாவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் எழுதிய புத்தங்கங்களில் சில தெலுங்கு, மலையாளம், கன்னட, இந்தி, ஆங்கிலம், ரஷ்ய ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதிக்கொடுத்துள்ளார். இவரது படைப்புகளுக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது.

இவரை போற்றும் விதமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 'கவிப்பேரரசு' என்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 'கவி சாம்ராட்' என்றும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் காலம் 'காப்பிய கவிஞர்' என்றும் பட்டங்களை வழங்கியுள்ளனர். தற்போது இவர் கவிப்பேரரசு என்றே அறியப்படுகிறார்.

இந்த நிலையில் இவரது கைவண்ணத்தில் உருவான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' தற்போது ஆங்கிலத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு 'சாகித்ய அகாடமி' விருதை பெற்ற இந்த புத்தகம், தற்போது 23-வது மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

துபாயில் அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறவிருக்கும் 'ரைஸ்' மாநாட்டில் கள்ளிக்காட்டு இதிகாசம் (The Saga of the Cactus Land) நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கீதா சுப்ரமணியம் ஆங்கில மொழிபெயர்த்துள்ளார். உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் அதனை பெற்றுக்கொள்கிறார்கள்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " “துபாயில் இருக்கிறேன். உலகப் புகழ்மிக்க அட்லாண்டிஸ் ஓட்டல் RISE சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு. கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘The Saga of the Cactus Land’ வெளியிடப்பட்டது; 32 நாட்டார் பெற்றுக்கொண்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' - துபாயில் மாநாட்டில் வெளியீடு !