Cinema
"விவேக் சாருக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.. ஆனா எனக்கு அப்படி இல்ல.." - புகழ்ந்து தள்ளிய யோகிபாபு !
கடந்த 2009-ம் ஆண்டு தமிழில் வெளியான 'யோகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபு. அது இவருக்கு கைகொடுக்க, திரை வட்டாரத்தில் யோகி பாபு என்று அழைக்கப்பட்டு வருகிற. அதன்பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 'யாமிருக்க பயமே' படத்தில் 'பன்னி மூஞ்சுவாயனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்த இவர், முதல் முறையாக 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நயன்தாரவுக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அது மாஸ் ஹிட் கொடுக்க, அதன்பின்னர் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மண்டேலா' படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.
நடிப்பில் முழுக்க முழுக்க பிசியாக இருக்கும் இவர், தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் அடுத்து வெளியாகப்போகும் படங்களானது 'ஓ மை கோஸ்ட்', 'அந்தகன்', 'சதுரங்க வேட்டை 2', 'தமிழரசன்'.
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு நடிக்கும் 'போட்' படக்குழுவினருடன் திருச்செந்தூர் சுப்பரமணிய கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, தனக்கு காமெடி தான் என்றும் கைகொடுக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்து வருகிறேன். விவேக் சார் போல் எனக்கு காமெடியில் கருத்து சொல்ல தெரியாது. விவேக் சார் கருத்துள்ளவர். அப்துல் கலாம் சார் போன்றவர்களுடன் பழகியவர், அதனால் நிறைய விஷயங்கள் அவருக்கு தெரியும். எனக்கு அப்படிப்பட்ட கருத்துக்கள் தெரியாது.
'மண்டேலா' போன்ற படம் பெரிய ஹீரோ வைத்து எடுக்க முடியாது. அது என் முகத்திற்கு ஏற்றாற்போல் அமைந்தது. அந்த படத்தை இயக்குநர் அஸ்வின் எனக்கு கொடுத்தார். அதே போல், ரஞ்சித் தயாரிப்பில் 'பொம்மை நாயகி' என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் என் முகத்திற்கு ஏற்றார் போல் தான் உள்ளது.
அடுத்து இயக்குநர் சிம்பு தாசனின் 'போட்' படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம் போட்டை பற்றிய படம், இது நகைச்சுவையாக இருக்கும். கதையை வைத்துதான் நான் படம் நடித்து வருகிறேன். ஹீரோவாக நான் எதிலும் நடிக்கவில்லை. காமெடிதான் எனது தொழில்; அது தான் எனக்கு கைக்கொடுத்தது; அதை தாண்டி என்னால் போக முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?