Cinema
மோதிக்கொள்ளும் சமந்தா vs ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்த மாதம் வெளியாகப்போகும் பட பட்டியல்கள் இதோ !
'இரத்தத்தில் கலந்தது சினிமா' என்பது போல், நம்மால் சினிமா பார்க்காமல் இருக்க முடியாது. பொழுதுபோக்குக்காக மட்டுமே உருவாக்கபட்ட சினிமா, பிற்காலத்தில் பொது கருத்துக்களை, விழிப்புணர்வுகளை எடுத்து கூறும் அளவிற்கு வளர்ந்தது.
தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு படம் இல்லை என்றாலும் கூட, ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.
அதிலும் பண்டிகை காலக்கட்டத்தில் சொல்லவே வேண்டாம்.. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திரை ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்துவர். அந்த வகையில் இந்தாண்டு தீப ஒளி பண்டிகையின் போது, தமிழ் திரையுலகில் பல்வேறு படங்கள் வெளியானது. அதிலும் திரையரங்கில் இரண்டு படங்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டது.
அதற்கு முன்பாக மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தீப ஒளி பண்டிகை வரை மட்டுமே திரையரங்கில் இந்த படம் ஓடும் என்றும் அனைவரும் எண்ணிய நிலையில், அப்போதும் மாஸ் வசூல் வேட்டையை செய்தது.
இந்த நிலையில் தற்போது தீபஒளி பண்டிகையை அடுத்து திரையரங்கில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்கள் வெளியாகியுள்ளது. அதில் நவம்பர் 4 முதல் 25-ம் தேதி வரை கோலிவுட் முதல் பான் இந்தியா படம் வரை இடம்பெற்றுள்ளது. பட்டியல் இதோ :
நவம்பர் 4 -
>> பிரதீப் ரங்கநாதன், ரவீனா ரவி, சத்யராஜ் நடிப்பில் 'Love Today'
நவம்பர் 11 -
>> சமந்தா நடிப்பில் - 'யசோதா'
>> ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் - 'டிரைவர் ஜமுனா'
>> பி.எஸ்.கார்த்தி நடிப்பில் - 'பரோல்'
>> பரத், வாணி போஜன் நடிப்பில் - 'மிரள்'
நவம்பர் 18 -
>> விஜய் அந்தோணி, ரம்யா நம்பீசன் நடிப்பில், - 'தமிழரசன்'
நவம்பர் 25 -
>> சந்தானம் நடிப்பில் - 'ஏஜென்ட் கண்ணாயிரம்',
>> சசிகுமார், அம்மு அபிராமி நடிப்பில் - 'காரி'
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்