Cinema
முதல் மனைவி தற்கொலை.. இரண்டாவது மனைவிக்கு கருக்கலைப்பு- பாஜகவை சேர்ந்த பிரபல நடிகர் மீது பாய்ந்தது வழக்கு
போஜ்புரி மொழி நடிகரும், பாஜக ஆதரவாளருமான பவன் சிங் (36), தனது இரண்டாவது மனைவியை தொடர்ந்து கொடுமைபடுத்தி, கருக்கலைப்பு செய்ததாக அவரது மனைவி வழக்கு தொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போஜ்புரி மொழியில் பிரபல நடிகராக இருப்பவர் பவன் சிங். இவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் நடிகராக மட்டுமில்லாமல், பாடகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
முன்னதாக 2014-ம் ஆண்டு இவருக்கும் நீலம் என்பவருக்கும் திருமணமானது. ஆனால் திருமணமான ஒரு ஆண்டிலேயே நீலம் தற்கொலை செய்து கொண்டார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சில மாதங்களுக்கு பிறகு இவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
இதையடுத்து 2018-ம் ஆண்டு ஜோதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களிலே ஜோதியை பவன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரது வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமையும் படுத்தியுள்ளனர். அதன்படி அவரிடம் இருந்து 50 லட்ச ரொக்க பணமும் பெற்றுள்ளனர். இருப்பினும் பவன் சிங், அவரது தாய் மற்றும் சகோதரி சேர்ந்து தொடர்ந்து கொடுமை படுத்தி வந்துள்ளனர்.
இதனிடையே தான் கர்ப்பமாக இருப்பதாக வீட்டில் தெரிவித்த ஜோதியை மீண்டும் மன ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். அதோடு அவருக்கு கருக்கலைப்பு மருந்தை கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளனர். தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளான ஜோதி கொடுமை தாங்க முடியாமல் இவர்கள் அனைவர் மீதும் கடந்த ஏப்ரல் மாதம் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரில் மேற்கண்ட அனைத்தையும் குறிப்பிட்டு, தன்னை தற்கொலை செய்ய தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவருக்கு இது குறித்து அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இது தற்போது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!