Cinema
சர்ச்சையில் சிக்கிய காந்தாரா பட குழுவினர்.. ‘வராக ரூபம்’ பாடலுக்கு தடை விதித்த நீதிமன்றம்.. என்ன நடந்தது?
‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றுள்ள வராக ரூபம் பாடலுக்கு காப்பி ரைட்ஸ் பிரச்னையால் கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளியான 'காந்தாரா' திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம் தான் காந்தாரா. கன்னட திரைப்படமான இப்படம் பொதுமக்கள் திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை ஈட்டியது. IMDB யில் இப்படத்திற்கு 9.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கன்னட திரையுலகில் அதிக ரேட்டிங் பெற்ற படமாக திகழ்கிறது.
இதைத்தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அனைத்து மொழி ரசிகர்களிடேயே வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை திரை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் இடப்பெற்றுள்ள வராக ரூபம் என்ற பாடம் தங்களிடம் அனுமதி பெறாமல் உருவாக்கப்பட்டதாக கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ் குற்றம்சாட்டியது. இவர்களது இந்த குற்றசாட்டை காந்தார படக்குழுவினரும் மறுத்தது.
இதையடுத்து இது தொடர்பாக தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர், 'வராக ரூபம்' தங்களிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை காந்தாரா படக்குழுவினரும் சந்தித்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'வராக ரூபம்' பாடலை திரையரங்குகளில் ஒலிபரப்புவதை நிறுத்துமாறு ‘காந்தாரா' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் அனுமதியின்றி காந்தாரா' படத்தில் வரும் 'வராஹ ரூபம்' பாடலை அதன் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், Amazon, YouTube, Spotify, wynk Music, Jiosavan போன்ற எந்தவொரு ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது” எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!