Cinema
தியேட்டரில் திரையிடப்பட்ட பில்லா.. ரசிகர்களின் குஷியால் பற்றியெரிந்த தியேட்டர்.. ஆந்திராவில் அட்ராசிட்டி!
பொதுவாக சினிமா என்பது பிரதானமான மக்களுக்கு பிடித்த ஒன்றாகும். அதன்மூலம் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான ஹீரோக்களை தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் தான் நமக்கு ரியல் ஹீரோ என்பது போல் நடந்து கொள்கின்றனர். தமிழ் சினிமாவில் கமல், ரஜினி, அஜித், விஜய் என்று அடுக்கிக்கொண்டு போனாலும், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயன்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ராம் சரண் என்ற தரவரிசையில் பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸும் உள்ளார். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்கள் மெகா ஹிட் கொடுத்ததால் அவருக்கு இருந்த ரசிகர்கள் மேலும் அதிகரித்தன. அதன்பிறகு அவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் கோதாவரி பகுதியில் 'வெங்கடராமா மல்டிபிளக்ஸ்' தியேட்டர் ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை (23.10) முன்னிட்டு தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பிரபாஸ் நடிப்பில் 2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'பில்லா' திரைப்படம் நேற்று இரவு திரையிடப்பட்டது.
எனவே தீபாவளி ஸ்பெஷலாக எண்ணிய பிரபாஸின் ரசிகர்கள் பெரிதளவு தியேட்டரில் குவிந்தனர். பல வருடங்கள் ஆனாலும் இந்த படத்திற்கு என்று தனி மவுசு இப்போதும் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை திரையில் கண்ட பிரபாஸின் ரசிகர்கள், மிகுந்த உற்சாகத்தில் திளைத்தனர்.
அப்போது பெரும் குஷியான ரசிகர்கள் தியேட்டருக்குள்ளேயே பட்டாசுகளை வெடித்தனர். அப்போது அந்த தீப்பொறி அங்கிருந்த பட்டாசு பாக்ஸ்களில் அதில் இருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதில் தியேட்டரில் உள்ள ஸ்கிரீனில் தீப்பொறி பட்டு அந்த ஸ்கிரீன் மளமளவென எரிந்தது. இதனால் பயந்துபோன ரசிகர்கள்தியேட்டரை விட்டு பதறியடித்துக்கொண்டு ஓடினர்.
பின்னர் தியேட்டர் ஊழியர்கள் வேகமாக செயல்பட்டு உள்ளே இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற செய்தனர். அதோடு தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தியேட்டர் உரிமையாளர் போலீஸாருக்கு புகார் அளித்தார். இந்த பட்டாசுகள் வெடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதை அடுத்து, அதை அடிப்படையாக கொண்டு இந்த செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இது தற்போது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!