Cinema
"பொன்னியின் செல்வனுடன் போட்டி போட முடியாது.." - விலகிய 7 தமிழ் படங்கள்.. யாருடையது எல்லாம் தெரியுமா?
இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த 30-ம் தேதி உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகியது. இந்த படமானது தென்னிந்திய தமிழ் மன்னர்களின் வரலாற்றைத் தழுவி எழுத்தாளர் 'கல்கி' எழுதிய ஒரு அருமையான நாவல் ஆகும்.
இதனை திரைப்படமாக எடுக்க, எம்.ஜி.ஆர்., கமல் என பலரும் ஆசைப்பட்டாலும் பல்வேறு இன்னல்களுக்கிடையே மணிரத்னம் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அதிக பட்ஜெட் நிறைந்த படம் இதுவே.
பான் இந்தியா அளவில் உருவான இப்படத்தில் அனைத்து முக்கிய மொழி நடிகர்களான ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என திரைபட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தை காண ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த 30-ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியானது.
இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுக்க ப்ரோமோஷனுக்கு சென்று வந்தனர். இதன் முதல் நாள் வசூல் 80 கோடியை தாண்டிய நிலையில், வெளியான 3 நாட்களில் 200 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. இதற்கு நடிகர்கள் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி தற்போது வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் எல்லாம் படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர். அதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'சதுரங்க வேட்டை 2' படமும் உள்ளது.
மேலும் அதில், அருண் விஜயின் 'பார்டர்', ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள 'Coffee with Kadhal', த்ரிஷா, அரவிந்த் சாமியின் 'சதுரங்க வேட்டை 2', மிர்ச்சி சிவாவின் 'காசேதான் கடவுளடா', யோகி பாபு நடிப்பில் வெளியாகவுள்ள 'தாதா', 'ரீ' உள்ளிட்ட படங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த இன்னோர் வெற்றி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்