Cinema

குடியரசுத் தலைவரிடம் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா: முழு படத்தொகுப்பு!

68வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சூரரைப்போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த படம் சூரரைப்போற்று, சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசை ஜி.வி.பிரகாஷ்குமார், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா ஆகிய 5 பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதேபோல் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்குச் சிறந்த படம், சிறந்த எடிட்டர், சிறந்த துணை நடிகை என 3 விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மண்டேலா படமும் சிறந்த வசனம், சிறந்த அறிமுகம் இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று 68 வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூரரைப்போற்று படத்திற்காகச் சிறந்த விருதைப் பெற்றார் நடிகர் சூர்யா.

அதேபோல் சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசை ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா ஆகியோர் தேசிய விருதைப் பெற்றனர்.

மேலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக இயக்குநர் வசந்த், ஸ்ரீகர்பிராசத், லட்சுமிப்பிரியா சந்திரமவுலி ஆகியோருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதேபோல் மண்டேலா திரைப்படத்திற்காகத் தேசிய விருது இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

Also Read: "நானு 13 வருஷமா பாக்குறேன்.. தமிழ்நாட்டுல படம் பண்ணவே பிடிக்கல.." - செல்வராகவன் பேச்சால் சர்ச்சை !