Cinema
உடல் நலம் தேறி வந்த இயக்குநர் சீனிவாசன்.. முத்தமிட்டு வரவேற்ற மோகன்லால் - நெகிழ்ச்சி நிகழ்வு !
மோலிவுட் என்று சொல்லப்படும் மலையாள திரையுலகில், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், நகைச்சுவை நடிகர் என பல்வேறு பிரிவுகளில் வலம் வந்தவர் சீனிவாசன். 1970-களில் நடிக்க தொடங்கிய இவர், தற்போது வரை சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த 2003-ம் ஆண்டு தமிழில் ஷ்யாம், மாதவன், த்ரிஷா நடிப்பில் வெளியான 'லேசா லேசா' படத்திலும் நடித்துள்ளார்.
அண்மையில் இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இவரது உடல் கோளாறுகள் பற்றி அவரது மகன்கள் ஒரு மேடையில் தெரிவித்ததையடுத்து, அந்த செய்தி வெளி வந்தது. இதனை கேட்டதும் மலையாள திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் அவருக்காக பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். உடல்நிலை மோசமானதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மலையாள விருது விழாவில் இயக்குநரும் நடிகருமான சீனிவாசன் பங்கேற்றுள்ளார். அதாவது மலையாள தொலைக்காட்சியான 'மழவில் மனோரமா'-வில் ஒளிபரப்பப்படும் 'மழவில் என்டர்டைன்மென்ட் விருது 2022 (Mazhavil Entertainment Awards 2022) இந்த ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவில் திரை நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். இதன் ப்ரோமோ அண்மையில் வெளியானது. அந்த ப்ரோமோவில், நடிகர் சீனிவாசனும் அந்த விருது விழாவில் பங்குபெற்றது காட்டப்பட்டிருந்தது.
மேலும் அவர் மேடைக்கு அழைக்கப்பட்ட போது, மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மோகன்லால் அவரை வரவேற்று அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இது தொடர்பான வீடியோக்களை, நடிகர், தொகுப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் ரமேஷ் பிஷாரதி, ஹனி ரோஸ் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !