Cinema

சிறந்த ஆசிய திரைப்படம் 'மாமனிதன்'.. - டோக்கியோவில் கோல்டன் விருதை தட்டி சென்ற தமிழ்ப்படம் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியானது தான் 'மாமனிதன்'. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி, அனிகா சுரேந்தர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம் பலரது பாராட்டுக்களையும் பெற்றது. யுவன் சங்கர் ராஜா தயாரித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தனர்.

இந்த படமானது கணவன்-மனைவி மற்றும் தந்தை தனது குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் பாசம் உள்ளிட்டவை கொண்டு மையமாகக் கொண்ட குடும்ப படமாகும். இந்த படத்தை பார்த்த திரைபிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

குறிப்பாக இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர் என பலரும் இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமியை வெகுவாக பாராட்டினர். கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் 'கோல்டன்' விருதைப் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்த படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read: கொட்டும் மழையிலும் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிய சிறுவன்.. வழுக்கும் பாறை மேல் ஒற்றை காலில் நின்று சாகசம் !