Cinema
Hollywood இந்தியர்கள்: ரஜினி முதல் தனுஷ் வரை.. ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்த நடிகர்கள் யார் யார்?
உலகமெங்கிலும் இருக்கும் சினிமா ரசிகர்கள் தொழில்நுட்பங்களை பற்றி அறிந்துக்கொள்ள விரும்பி பார்ப்பது ஹாலிவுட் படங்களை தான். இத்துறையினர் திரையில் நிகழ்த்தும் மேஜிக் அனைவரையும் வசீகரிக்கிறது. நம் நாட்டின் ஏதோ ஒரு திசையின் கடைசிவரை சென்று தேடினாலும் அங்கும் நம் மொழி படங்களை போல் சில ஹாலிவுட் படங்களுக்கான ரசிகர்களும் இருக்க தான் செய்கின்றனர். ஹாலிவுட்டின் இந்த அபார வளர்ச்சிக்கு அவர்கள் கையாளும் அதிநவீனத்துவம் முக்கிய காரணம் என்றாலும், படத்தின் வியாபாரத்திற்காக வேறு நாட்டு நடிகர்களையும் இணைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி இந்தியாவில் இருந்து ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் சில முக்கிய பிரபலங்கள் குறித்து தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.
பொதுவாக தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்வார்கள். அதில் சில தமிழ் நடிகர்கள் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் உடன் சேர்த்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவை தாண்டி தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தி இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், இந்திய சினிமாவின் முக்கிய நடிகராகவும் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் 1988ஆம் ஆண்டு ‘ப்ளட் ஸ்டோன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். ப்ளட் ஸ்டோன் எனும் அறியவகை ரத்தின கல்லை தேடி அமெரிக்காவில் இருந்து இந்தியாவரும் தம்பதிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை. Dwight H. Little இயக்கிருந்த இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களான ப்ரிட் ஸ்டிம்லி, அன்னா நிக்கோலஸ் ஆகியோரோடு பயணிக்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று நல்ல லாபம் பார்த்திருந்தது. இதனால் ரஜினியின் புகழோடு சேர்ந்து இந்திய நடிகர்களுக்கான மதிப்பும் கூடியது.
ரஜினிக்கு முன்பாக 1950களில் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் நடிகராக பார்க்கப்பட்ட நம்பியார் அவர்கள் ‘தி ஜங்கிள் சயின்ஸ்’ எனும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க இந்தியாவில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் நம்பியார் Rod Cameron, Cesar Romero, Marie Windsor ஆகியோரோடு சேர்ந்து நடித்திருந்தார். தமிழில் காடு எனும் தலைப்பில் இந்த படம் வெளியாகிருந்தது. காடுகளில் நடக்கும் அட்வெஞ்சர் நிகழ்வுகளை முந்திட்டங்கள் எதும் இன்றி படமாக்கிக்கொண்டு அதற்குள் ஒரு கதையும் உருவாக்கி ஒரு அரசியல் சதிராட்டங்களை இந்த படத்தின் வாயிலாக சொல்லிருப்பர் இயக்குனர் William Berke, Ellis Dungan.
‘Tropical Heat’ 1993ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். Jag Mundhra இயக்கிருந்த இந்த படம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வரும் கதைக்களமே. பிரகாஷ் ராஜின் நடிப்பிற்கு இந்த படம் ஹாலிவுட்டில் பெரிய அளவில் வாய்ப்புகளை தேடித்தரவில்லை என்றாலும் இந்தியாவில் கன்னட சினிமாவை தாண்டி பிரகாஷ் ராஜ் எனும் நடிகரை அடையாளம் காட்டியது. குறிப்பாக இந்த படத்திற்கு பிறகு தான் பிரகாஷ் ராஜ் தமிழ் சினிமாவிற்குள் தனது எண்ட்ரியை கொடுத்திருந்தார்.
தமிழ், ஹிந்தி ஆகிய மொழி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினர். மாதவன் 1997ஆம் ஆண்டு வெளியாகிருந்த ‘இன்பர்நோ’ படத்தின் ரவி எனும் கதாப்பாத்திரத்தில் படத்தின் நாயகன் Don Wilson-க்கு உதவி செய்யும் இன்டர்போல் ஏஜென்டாக நடித்திருப்பார். Fred Olen Ray இயக்கிருந்த இந்த படம் வணிக ரீதியாக வெற்றியடைந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பாகங்களுக்கும் வழி செய்தது. அமெரிக்காவில் இருந்து தப்பி இந்தியாவில் மறைந்திருக்கும் தீவிரவாதி ஒருவனை தேடிச்செல்லும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பன்ஸ் த்ரில்லர் படம் தான் இந்த இன்பர்நோ.
இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையான ஐஸ்வர்யா ராஜ் ஹாலிவுட்டில் 5 படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். Bride & Prejudice, "The Mistress Of Spices", Provoked, தி லாஸ்ட் லெஜியன், "Pink Panther 2" ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரபல ப்ரிட்டிஷ் இயக்குனர் Gurinder Chadha இயக்கிருந்த இந்த படம் Bride & Prejudice எனும் பெயரில் 1813ஆம் ஆண்டு வெளியான நாவலின் அடிப்படையில் படமாக்கப்பட்டிருந்தது. இந்திய திரைப்படங்களைப் போல பல பாடல் காட்சிகள் நிறைந்த படமாகே இந்த படம் உருவாகிருந்தது. தொடர்ந்து 2005, 2007, 2009 என வரிசையாக ஹாலிவுட் படங்களில் நடித்து உலகளவில் பிரபலமான நடிகையானார் நம் உலகழகி. குறிப்பாக The Last Legion படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு சண்டைக்காட்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கும். ஹாலிவுட் சண்டைக்காட்சிகளை நடிகர்களே வியக்கும் அளவிற்கு மிரட்டிருப்பார். அடுத்து இவரின் நடிப்பில் வெளியான ‘பிங்க் பந்தர் 2’ படத்தில் காமெடி கலந்த ஆக்ஷன் காட்சிகளில் அசத்திருப்பார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஹாலிவுட் பட வாய்ப்புகள் வந்தாலும் குடும்ப வாழ்வினை கருத்தில் கொண்டு அதனை தவிர்த்துவிட்டார்.
ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் ஹாலிவுட் பக்கம் தங்களின் கவணங்களை திருப்பினர். பிரியங்கா சோப்ரா முதலில் ஹாலிவுட் சீரிஸில் தனது அறிமுகத்தை கொடுத்தார். குவாண்டிகோ எனும் தொலைக்காட்சி தொடர்மூலம் அமெரிக்க ரசிகர்களின் வீடுகளில் நுழைந்தவர் பின்னர் பே வாட்ச், The Matrix Resurrections, The Sky Is Pink, Isn't It Romantic உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கேஸ்ட் ரோல், குணசித்திர நடிகை என ஹாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியவர் பே வாட்ச் படத்தில் வில்லியாக வந்திருப்பார், தொடர்ந்து சில முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர் ஆவணப்படங்களில் நடிப்பது தயாரிப்பது என ஹாலிவுட்டிலும் ஒரு முக்கிய நடிகையாகிவிட்டார். தற்போது இந்திய படங்களை காட்டிலும் இவர் ஹாலிவுட்டில் அதிக கவணம் செலுத்தி வருகிறார்.
இவரை தொடர்து பாலிவுட்டின் மற்றொரு உச்ச நடிகையான தீபிகா படுகோண் ‘ட்ரிபிள் எக்ஸ் ரிட்டர்ன் ஆஃப் க்சாண்டர் கேஜ்’ படத்தில் நாயகியாக நடித்து ஹாலிவுட்டில் தனது எண்ட்ரியை கொடுத்தார். பாலிவுட் படங்களிலே பல முக்கிய கேரக்டர்களில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ள இவருக்கு ட்ரிபிள் எக்ஸ் படம் ஒரு ஃபுல் ஆக்ஷன் ப்ளாக்காக அமைந்திருந்தது. வின் டீசலுடன் சேர்ந்து இவர் செய்த சண்டைக்காட்சிகள் திரையரங்குகளில் பெரும் கொண்டாட்டமாக அமைந்திருந்தது.
இந்த வரிசையில் 2013ஆம் ஆண்டு அமிதாப் பச்சனும் இனைந்தார். ‘தி கிரேட் கேட்ஸ்பி' எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான இவர் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் அங்கேயும் வெற்றிக்கண்டார். Baz Luhrmann இயக்கிருந்த இந்த படத்தில் இவர் ஹாலிவுட்டில் உச்ச நட்சத்திரமான Leonardo DiCaprio உடன் சேர்ந்து நடித்திருந்தார். 1930ஆம் ஆண்டு முதலாம் உலக போரின் பின்னணியில் உருவாகிருந்த இந்த படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மற்றொரு பாலிவுட் பிரபலமான இர்ஃபான் கான் ஹாலிவுட்டிலும் ஒரு முக்கிய நடிகராகவே பார்க்கும் அளவிற்கு தன்னை மெருகேற்றிக் கொண்டார். 2001ஆம் ஆண்டு வெளியான ‘தி வாரியர்’ படம் துவங்கி 2018 வரை மொத்தம் 9 ஹாலிவுட் படங்களில் நடித்துவிட்டார். இதில் ஸ்லம் டாக் மில்லினியர், லைஃப் ஆப் பை ஆகிய படங்கள் இவரை பல முக்கிய விருது மேடைக்கு கொண்டு சென்றது. ஹீரோ, குணசித்திர நடிகர், கெஸ்ட் ரோல் என எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடாத இவர் The Amazing Spider-Man, Jurassic World, Inferno ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் வந்திருப்பார். பாலிவுட் படங்களில் எதார்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்ற இவர் விரைவில் ஆஸ்கர், கோல்டன் க்ளோப் போன்ற அமெரிக்காவின் உயரிய விருதுகளை வெல்வார் என இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்தனர். ஆனால், காலம் அவருக்கு அதிக அவகாசம் கொடுக்கவில்லை என்பது ஒரு வருத்தம்.
இர்ஃபான் கானின் அறிவுருத்தலின்படி ஹாலிவுட்டிற்கு எண்ட்ரியான நடிகை தான் நீது சந்தரா. ‘யாவரும் நலம்’ படம் மூலம் தமிழுக்கு வந்த இவர், தொடர்ந்து அமீரின் ஆதி பகவன், ஆர்யாவின் சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட சில படங்களில் நடித்தார். பின்னர் இந்திப் படங்களில் கவனம் செலுத்திய அவர், இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர், நடித்த நெவர் பேக் டவுன் : ரிவோல்ட் (Never Back Down:Revolt) என்ற ஹாலிவுட் படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருந்தார் நீது சந்திரா. Kellie Madison இயக்கிருந்த இந்த படம் குத்துசண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகிருந்தது இதில் ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக நீது சந்திராவிற்கும் சரியாக கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது.
தமிழில் காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜா குமார் அதன் பிறகு அதிகமாக ஹாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்த ‘ஃப்ளேவர்ஸ்’ திரைப்படம் அவருடைய முதல் ஹாலிவுட் திரைப்படம் ஆகும். இந்திய இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கிருந்த இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து Night of Henna, Anything For You, Man on a Ledge மற்றும் Brawl in Cell Block 99 என ஹாலிவுட்டில் மட்டும் 10 படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்திய படங்களில் கவணம் செலுத்திவரும் இவர் இங்கு தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்துவந்த நெப்போலியன் பின்னர் அமெரிக்காவில் செட்டில் ஆகியதை தொடர்ந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். ‘The Devil Night' எனும் ஹாரர் படத்தில் நடித்துமுடித்துவிட்டு பினர் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழகம் வந்த நெப்போலியனுக்கு ஊடகத்துர்றையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. 2019ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து ‘கிருஸ்துமஸ் கூப்பன்’, ‘ஒன் மோர் ட்ரீம்’, ‘ட்ராப் சிட்டி’ ஆகிய படங்கள் இவர் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகிவருகிறது. டிராப் சிட்டி இந்த படத்தில் நெப்போலியன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது ஷூட்டிங்கில் இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் மூலமாக இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் ஹாலிவுட்டிலும் எண்ட்ரியாகவுள்ளார். Ricky Burchell இயக்கும் இந்த படத்தில் இசைக்கு அதிக முக்கியதுவம் இருப்பதால் ஜி.வி. பிரகாஷுக்கு இந்த படம் நல்ல பெயரை ஹாலிவுட்டில் பெற்று தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது கோலிவுட், டோலிவுட் என விறுவிறுப்பாக படங்களில் நடித்துவரும் நடிகை சமந்தா 'Arrangements of Love' எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். Philip John இயக்கும் இந்த படத்தின் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமந்தாவிற்கு தற்போது இந்திய அளவில் மார்கெட் இருப்பதால் அவரின் ஹாலிவுட் எண்ட்ரிக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு இருக்கும்.
தமிழில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் பாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் வட இந்தியாவிலும் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டார், அதனை தொடர்ந்து ஹாலிவுட்டிற்கு சென்ற இவர் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த ஃபகிர்' படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்திருந்தார். Ken Scott இயக்கத்தில் உருவாகிருந்த இந்த படம் மும்பையில் இருந்து ஃப்ரான்ஸ் செல்லும் ஒரு மெஜிஷியனின் கதையாக உருவாகிருந்தது. படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பும் கிடைத்ததை தொடர்ந்து தற்போது ‘தி க்ரே மேன்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் ரூசோ ப்ரதர்ஸ் இயக்கத்தில் வெளியாகிருக்கும் இந்த படத்தில் க்ரிஸ் எவன்ஸ் மற்றும் ரியிஆன் கோஸ்லின் ஆகியோரு சேர்ந்து தனுஷ் ஒரு அசாசியனாக நடித்துள்ளார். கடந்த வெள்ளியன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படம் தனுஷுக்கு இன்னும் அதிகமான ஹாலிவுட் பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சினிமா ரசிகர்களை பொருத்த வரையில் ஹாலிவுட் திரையுலகம் என்றும் ஆச்சர்யங்களை நிகழ்த்தும் ஒரு அதிசயம் தான். அதில் நம் இந்திய நடிகர்களை பார்ப்பது என்பது கூடுதல் மகிழ்வு, அந்த வகையில் ரஜினி முதல் தனுஷ் வரை இந்திய சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் தனக்கான முத்திரையை பதித்த நடிகர், நடிகைகள் ஒரு சில ஹாலிவுட் படங்களின் மூலம் தங்களின் திறமையை உலக சினிமா ரசிகர்கள்வரை கொண்டு சேர்த்திருப்பது பாராட்ட கூடிய ஒன்றே. ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு பின்னாள் இருக்கும் வணிகம் ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கான உழைப்பையும், ஒரு கலைஞனின் மெனக்கெடல்களையும் ஒப்பிடுகையில் எல்லா துறையில் நடிப்பது என்பது ஒன்று தான் ஆனால், அதன் வியாபாரம் மட்டுமே வேறுபடுகிறது என்கிற உண்மை விளங்கும். ரஜினி நடித்த ‘ப்ளாக் ஸ்டோனோ அல்லது தனுஷ் நடித்த க்ரே மேனோ’ வழக்கத்துக்கு மாறான ஒரு கதையாக அது இருந்துவிடவில்லை அதன் தரத்தில் மட்டுமே வேறுபாடு உள்ளது. அதை சரிசெய்துக் கொண்டால் எம்மதமும் சம்மதம் என்பது போல் எத்துறையும் நம்துறையே.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!