Cinema
இரவின் நிழல்! இப்படியான ஒரு படைப்புக்கு நிச்சயம் பார்த்திபன் & டீமுக்கு மிகப்பெரிய பாராட்டு!
அதென்ன, nonlinear சிங்கிள் ஷார்ட் என்று பலர் கேட்கலாம்!
முதல் பாகம் மேக்கிங் வீடியோ. இரண்டாவது பாதி முழுக்க படம் இப்படியான முயற்சிக்கு பார்த்திபனுக்கு மிகப்பெரிய பாராட்டு கொடுக்கலாம். மிகப்பெரிய கடின உழைப்பும், அசாத்திய துணிச்சலும், தன்னம்பிக்கையும் இல்லை என்றால் நிச்சயம் இப்படியான ஒரு படத்தை திரையில் கொடுக்க முடியாது.
ஒரு படத்தை சிங்கிள் ஷார்ட்டில் எடுக்கும் போது படம் முடிவதற்கு ஐந்து நிமிடத்துக்கு முன்னர் எதாவது பிரச்னை வந்தால் மறுபடியும் முதலில் இருந்து எடுக்க வேண்டும். அப்போது இருக்குற மன வேதனை சொல்லி மாளாது. அப்படியான சிக்கல்களை மன வலிமையினால் கடந்துள்ளார் பார்த்திபன்.
பிரிகிடா & சினேகா இவர்கள் இருவரின் நடிப்பும் அசத்தலாக இருக்கிறது. nonlinear படம் என்பதால் அடுத்தடுத்து இவங்களுக்கு சீன் வரும். ஒரு சீன் முடித்துவிட்டு அடுத்த சீனில் உடை தொடங்கி நடிப்பு வரை அசத்தியுள்ளனர்.
சாமியாரா ரோபோ சங்கர் & ராஜமாதா கேரக்டரில் வரும் வரலெட்சுமி ஆகிய இருவருக்கும் பெரிய கேரக்டர் இல்லாததால் நடிப்பிலும் பெரிய ஸ்கோப் இல்லை. படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை பெரிய பிளஸ். இசையால் படத்தினுல் நம்மை ஒன்ற வைக்கிறார்.
எக்ஸ்பீரியன்ஸா சூப்பர் படம். டெக்னிக்கலா செம படம். ஆனா, கதையா படம் எப்படி என்று கேட்டால்? வழக்கமான ஒரு கதை. சில இடங்களில் தியேட்டர் டிராமா பார்ப்பது போல வரும் ஃபீலை தவிர்க்க முடியாது. எந்த கேரக்டரோடயும் எமோஷனா கனெக்ட் ஆக முடியுமா என்று தெரியவில்லை. படமும், எங்கே சென்று முடியும் என்று நமக்கு தெரியும் என்பதால் எதிர்பார்ப்பும் படத்தில் இல்லை. இப்படியான ஒரு படைப்புக்கு நிச்சயம் பார்த்திபன் & டீமுக்கு மிகப்பெரிய பாராட்டு. பார்த்து எஜ்சாய் செய்யுங்கள்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?