Cinema
“ஏ..ப்ஃபா.. இத்கா ஊ அமச்சா” - ‘டான்’ பட குழுவினர் வெளியிட்ட வீடியோ.. விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர், சிவகார்த்திகேயன். அனைத்து குடும்பங்களின் செல்லப்பிள்ளை 'Prince' ஆக இருக்கும் இவர், நடித்து வெளியான அனைத்து படங்களும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் தான் 'டான்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு 'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு 'டான்' படம் வெற்றிபெற்றதால் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, குக்கு வித் கோமாளி சிவாங்கி, பால சரவணன், சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து கலக்கியுள்ளது. இந்த படம் வெளியாக ரூ.100 கோடிக்கும் மேலாக வசூலித்து BOX OFFICE-ல் சாதனை படைத்துள்ளது. திரை ரசிகர் மட்டுமின்றி, திரை பிரபலங்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டை பெற்ற இந்த படம் எமோஷன், காமெடி என்று பார்ப்பவர்கள் கண்களை கலங்க செய்யும்.
இந்த நிலையில், 'டான்' திரைப்படதிலுள்ள ஒரு பகுதியில் இடம்பெறும் காமெடி சீன் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, அந்த படத்தில், தனது அப்பாவாக நடிப்பதற்காக சூரியை அழைத்துக்கொண்டு Parent Meeting-ஐ சந்திப்பர்.
அப்போது சிவகார்த்திகேயனுக்கும் சூரிக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெறும். அப்போது "ஏ..ப்ஃபா..." என்று இருவரும் கொரியன் ஸ்டைலில், ராகம் போட்டுக்கொண்ட பேசும் அந்த காமெடி சீனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நடிகர் சூரிக்கு இந்த டையலாக்கை எப்படி பேசுவது என்று சொல்லித்தருகிறார். சிவகார்த்திகேயனும், சூரியும் இந்த வசனத்தை பேச, 'டான்' படக்குழுவினரால் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலே இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!