Cinema
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்.. எதிர்பாராமல் வந்து தம்பதிகளுக்கு SURPRISE கொடுத்த பிரபலங்கள்?
தமிழ் சினிமாவில் 2005ம் ஆண்டு ஐயா படத்தில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இதையடுத்து இவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ்சினிமாவின் கனவு நாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இதையடுத்து இவர்கள் திருமணம் எப்போது நடைபெறும் என திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அண்மையில் இருவரும் அறிவித்தனர். இதையடுத்து திருமண பத்திரிகையை நடிகர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினர்.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, விஜய்சேதுபதி, கார்த்தி, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதேபோல் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இவர்கள் திருமணத்தில் பங்கேற்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரையும் வாழ்த்தியுள்ளார். மேலும் இயக்குநர்கள் கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், மணிரத்னம் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அனிரூத் உள்ளிட்ட பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மேலும் ட்விட்டரில் #Nayanthara #Nayantharawedding ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.
இவர்கள் திருமணத்தில் பிரபலங்கள் அல்லாதோர் கலந்து கொண்டவர்களுக்கு QR Code ஸ்கேன் செய்யப்பட்டு பின்னர் உள்ளே அனுமதித்துள்ளனர். மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நயன் தாரா, விக்னேஷ் சிவனின் திருமணத்தின் உணவு வகைகளின் மெனு கார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பன்னீர் பட்டானி கறி, சேப்ப கிழங்கு புளி குழம்பு, காளான் மிளகு வருவல், பூண்டு மிளகு ரசம் என விதவிதமான உணவுகள் இடம் பெற்றுள்ளன.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்