Cinema
‘விஜய் 66’ படத்தின் கதை இதுதான்.. ஓபனாக பேசிய தயாரிப்பாளர்! #CINEMAUPDATES
சைன்ஸ் பிக்ஷன் கதையில் நடிக்கவிருக்கும் சூர்யா!
அடுத்தடுத்த படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலா, வெற்றிமாறன், சுதா கொங்கரா, சிவா என வரிசையாக சூர்யாவிற்கு படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் ஒரு சைன்ஸ் பிக்ஷன் படமும் இணையவுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை ரவிகுமார் இயக்கவுள்ளார். 2024ஆம் ஆண்டு இந்த படத்தின் ரிலீஸ் ப்ளான் செய்யப்பட்டுள்ளதாக தகவல். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எதிர்ப்பார்க்கலாம்.
‘ஃபேமிலி மேன் 3’ அறிவிப்பை வெளியிட்ட அமேசான்...
ஃபேமிலி மேன் சீரிஸின் மூன்றாவது பாகம் பற்றிய அறிவிப்பை அமேசான் ப்ரைம் அறிவித்துள்ளது. முதல் இரு பாகங்களை உருவாக்கிய ராஜ் மற்றும் டி கே தான் மூன்றாவது சீசனையும் இயக்குகின்றனர். இரண்டாவது சீசனில் முடிவிலேயே அடுத்த சீசன் வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் ஒரு மிஷனைப் பற்றி இருக்கும் என கூறும் விதமாக முடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த அறிவிப்பு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
அஜித் படத்துடன் மோதும் கார்த்தியின் ‘சர்தார்’...
கார்த்தி நடிப்பில் சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உருவாகிவருகிறது. இதில் கார்த்தி இரு வேடங்களில் நடித்து வரும் ‘சர்தார்’ படம் வரும் தீபாவளி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது, அதே தேதியில் அஜித்தின் 61வது படமும் வெளியாக வாய்ப்பிருப்பதால் கைதி - பிகில் போன்ற ஒரு தீபாவளியாக இந்த தீபாவளி அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முகின் ராவ் நடிப்பில் உருவாகிருக்கும் அடுத்த ஆல்பம் பாடல்..!
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமான முகின் ராவ் வேலன் படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இதுதவிர நிறைய ஆல்பம் பாடல்களை பாடியும் நடித்தும் வருகிறார். அந்தவகையில் தற்போது இவரின் நடிப்பில் ‘ஒத்த தாமரை’ எனும் ஆல்பம் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்துள்ளார்.
‘விஜய் 66’ கதைக்களம் இதுதான் ஓபனாக பேசிய தயாரிப்பாளர்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் இருக்கும் கூடவே குடும்ப எமோஷ்னல் விஷயங்களும் கலந்து நல்ல ஹார்ட் டச்சிங் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். படத்தின் கதைக்களம் பற்றி தயாரிப்பாளர் வெளிப்படையாக கூறியுள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !