Cinema

Netflixல் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ்.. அஷ்வின், முகேன் ராவ் இணையும் ஆல்பம்! #5in1_Cinema

1. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மியூசிக் ஆல்பம்!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக உள்ள புதிய இசை ஆல்பம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முறையாக தனி இசை ஆல்பம் ஒன்றுக்கு இசையமைக்க உள்ளார். இந்த ஆல்பம் பற்றிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த ஆல்பத்தில் குக்வித் கோமாளி புகழ் அஷ்வினும், பிக்பாஸ் பிரபலமும் பாடகருமான முகேன் ராவும் இணைந்துள்ளனர். இதனால் இந்த ஆல்பம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

2. வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம்!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவிருக்கும் இந்த படத்திற்கு ‘டைகர் நாகேஷ்வர ராவ்’ என தலைப்பு அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளது.

3. ஆகஸ்டில் கேம் ஆஃப் த்ரோனின் முந்தைய பாகம் 'House of the Dragon' வெளியாகிறது!

உலகளவில் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று தான் ‘கேம் ஆஃப் த்ரோன்’. 8 சீசன்களாக வெளியான இந்த நெடுந்தொடரின் முந்தைய கதையை தற்போது சீரிஸாக எடுத்து வருகின்றனர். 'House of the Dragon' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் முதல் சீசன் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4. நெட்பிளிக்ஸில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘எதற்கும் துணிந்தவன்’. ஆரம்பமுதலே கலவையான விமர்சனங்களை சந்தித்த இந்த படத்தின் வசூலில் எந்த குறையும் இல்லை என்பதே உண்மை. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மைய கருவாக கொண்டு வெளியாகிய இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

10. சென்சார் அனுமதி வாங்கிய ‘கே.ஜி.எஃப் - 2’!

ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்களில் அதிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்கள் விஜய்யின் பீஸ்ட் மற்றும் யஷ் நடித்திருக்கும் கே.ஜி.எஃப் 2. இதில் பேன் இந்திய படமான கே.ஜி. எஃப் 2 படத்தின் மீது உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தின் சென்சார் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படம் 2 மணிநேரம் 48 நிமிடம் ஓடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சென்சார் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! #5in1_Cinema