Cinema
6 ஆஸ்கர் விருதுகளை வென்ற Dune திரைப்படம்.. சிறந்த நடிகர் விருதை வென்றார் வில் ஸ்மித் : முழு பட்டியல் இதோ!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது விழா நடைபெற்றது. இதில் 'Dune' திரைப்படம் சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு, ஒளியமைப்பு, விஷுவல் எபக்ட்ஸ் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆகஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.
King Richard படத்திற்காக முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் நடிகர் வில் ஸ்மித். அதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை The Eyes of Tammy Faye திரைப்படத்திற்காக ஜெசிகா கேஸ்டெய் பெற்றுள்ளார்.
The Power of the Dog படத்திற்காக சிறத் இயக்குநர் விருதை வென்றார் இயக்குநர் ஜேன் கேம்பியன். மேலும் சிறந்தப்படத்திற்கான விருதை CODA திரைப்படம் வென்றுள்ளது. இந்தப்படத்தை ஷியான் ஹெட்டார் இயக்கியுள்ளார்.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார். மேலும் சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் விருதை encanto திரைப்படம் வென்றது. ஆவணத்திரைப் படத்துக்கான விருதை SUMMER OF SOUL திரைப்படம் வென்றுள்ளது. பெல்பாஸ்ட் படத்திற்காகச் சிறந்த திரைக்கதைக்கான விருதை சென்றார் கென்னத் பிரானா.
அதேபோல் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை THE QUEEN OF BASKETBALL வென்றுள்ளது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை THE WINDSHIELD WIPER திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஜப்பான் நாட்டு திரைப்படம் Drive My Car வென்றுள்ளது. டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் Dune 6 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!