Cinema
'நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் neutral' - கவனம் பெறும் உதயநிதி ஸ்டாலினின் வசனம்!
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையையும், உயர் சாதியினரால் பாதிக்கப்படுவதையும் விவரித்திருக்கும் இந்த படம்.
இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக போனி கபூரின் பேவியூ நிறுவனம் தயாரிக்கிறது. அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆயுஷ்மான் குரானா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியில் இயக்கிய அனுபவ் சின்ஹாவே தமிழ் பதிப்பின் கதையை தீட்டியிருக்கிறார்.
அதன்படி சாதிய தீண்டாமையை ஒழிக்கும் வகையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற இணைச் சொற்றொடரோடு நெஞ்சுக்கு நீதி படத்தின் போஸ்டர் ரிலீஸானபோதே பெரும் கவனத்தை பெற்றிருந்தது.
இந்த நிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டீசரில் ‘நடுவுல நிக்குறது இல்லை neutral, நியாயத்தின் பக்கம் இருப்பதுதான் neutral’ என உதயநிதி ஸ்டாலின் பேசும் வசனம் பலராலும் வரவேற்றக்கப்பட்டிருக்கிறது.
விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!