Cinema
அரசியல் முதல் Time Loop வரை.. 2021ஆம் ஆண்டில் திரைக்கு வந்த தரமான ‘தமிழ் படங்கள்’ - ஒரு பார்வை!
கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு பாதிப்புக் காரணமாக சினிமாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திரையரங்குகள் மூடப்பட்டு படபிடிப்புக்குத் தடைவிக்கப்பட்டது.
அதன்பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதனிடையே OTT தளங்களும் மிகுந்த செல்வாக்கைப் பெறத் தொடங்கின.
அடுத்தடுத்து வெளியான முன்னணி படங்கள் உட்பட பல படங்கள் OTT தளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. பின்னர் திரையரங்குகளும் வழக்கம்போல் செயல்பட்ட துவங்கின.
இந்த 2021ஆம் வருடம் சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. சில படங்கள் தரமான படங்கள் என்ற பெயரைப் பெற்றன. சில படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றன. அப்படிப்பட்ட சில திரைப்படங்களை பார்ப்போம்!
1. மாஸ்டர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைபடத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்தனர்.
2. கர்ணன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு ஆகியோர் நடித்தனர்.
3. மண்டேலா
இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில், நடிகர்கள் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
4. சார்பட்டா பரம்பரை
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
5. சுல்தான்
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
6. மாநாடு
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர்கள் சிலம்பரசன், எஸ்.ஜே சூர்யா, கல்யாணி ஆகியோர் நடித்துள்ளனர்.
7. டாக்டர்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
8. அண்ணாத்த
இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
9. ஜெய் பீம்
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
10. ரைட்டர்
பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘ரைட்டர்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!