Cinema
Decoding ’வாடா தம்பி’ பாடல்: சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கதைக்களம் இதுவா?
சன் பின்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது எதற்கும் துணிந்தவன் படம். சூர்யாவின் 40வது படமாக உருவாகியுள்ள இதில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2022ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
’வாடா தம்பி’ என்ற intro பாடலாக உள்ள இதனை டி.இமான் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகியுள்ளது. அனிருத், ஜி.வி.பிரகாஷ் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
எதற்கும் துணிந்தவன் படம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடுமைகளை மையமாக வைத்து கோவையை பின்புலமாக கொண்ட கதையாக உருவாகிறது என அண்மையில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ராமநாதபுரத்தை மையமாக கொண்ட படமாக உருவாகியிருப்பது பாடல் உள்ள காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி வாடா தம்பி பாடலில் சூர்யா உபயோகிக்கும் ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்கள் TN 65 என ராமநாதபுர பதிவு எண் கொண்டவையாக உள்ளது என பேசப்படுகிறது.
இதுபோக முன்பு வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் போஸ்டர்களையும் ஒப்பிட்டு அதில் சூர்யா கையில் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் ஏந்தியிருப்பதும், பல இளைஞர்களை அடித்து துவம்சம் செய்திருப்பது போன்று இடம்பெற்றிருந்ததை பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தோடு ஒப்பிட்டு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஹரி இயக்கத்தில் வெளியான வேல் படத்தில் வந்த வெற்றிவேல் கதாபாத்திரம் போன்றே எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவின் கேரக்டர் உள்ளதாகவும் நெட்டிசன்கள் decode செய்து வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்து படக்குழு எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 4ம் தேதி திரைக்கு வர உள்ளது என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!