Cinema
கரீனா கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? - கரண் ஜோஹர் வீட்டுக்கு சீல் - பீதியில் பாலிவுட்!
கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பார்ட்டி நடந்த வீட்டிற்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட கரீனா கபூர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் வீட்டில் கடந்த 8ஆம் தேதியன்று ஒரு பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர், அம்ரிதா அரோரா, சீமா கான், மஹீப் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பார்ட்டியில் கலந்துகொண்டவர்களில் கரீனா கபூர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதலில் சீமா கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்னர் கரீனா கபூர், அம்ரிதா ஆகியோர் சோதனை செய்து கொண்டதில் அவர்களுக்கும் தொற்று உறுதியானது. கொரோனா முதல் அலை தொடங்கிய காலத்தில் இருந்தே கரீனா பாதுகாப்பாக இருந்தபோதும் அவருக்கு இந்த முறை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த பார்ட்டி நடந்த கரண் ஜோஹர் வீட்டுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. பார்ட்டி நடத்திய கரண் ஜோஹர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்கள் சிலர் அடுத்த சில நாட்களில் அனில் கபூரின் இளைய மகள் ரியா கபூர் நடத்திய பார்ட்டியிலும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களான கரிஷ்மா, மசாப், மலைகா அரோரா ஆகியோர் கலந்து கொண்டதால் பாலிவுட் வட்டாரத்தில் கொரோனா இன்னும் அதிகரிக்கும் என பீதி நிலவுகிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !