Cinema
‘கூழாங்கல்’ - சர்வதேச அரங்கில் நம்ம ஊரு படம்: முதல் முயற்சியிலேயே ஆஸ்கர் செல்லும் இளம் தமிழ் இயக்குநர்!
சினிமாவில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இருந்து வெளியாகும் நல்ல படங்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 94வது ஆஸ்கர் விருதுகள் 2022ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய திரைப்படம் ஒன்றைத் தேர்வு செய்வது குறித்து தேர்வுக்குக் கூட்டம் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது.
இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 15 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.
இதையடுத்து தமிழ்படமான‘கூழாங்கல்’ படத்தை சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கத் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் ‘கூழாங்கல்’ படத்தை வினோத்ராஜ் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ஏற்கனவே ‘கூழாங்கல்’ படம் நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!