Cinema

கேரள மாநில சினிமா விருதுகள்: சிறந்த படமாக ‘The Great Indian Kitchen’ தேர்வு.. விருதுகளை அள்ளிய ‘Kappela'!

மலையாளத்தில் வெளியாகும் சிறந்த திரைப்படங்ளுக்கு கேரள அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. 51வது கேரள அரசின் சினிமா விருதுகளுக்காக கடந்த ஆண்டு வெளியான படங்களில் 80 படங்கள் விருது தேர்வுக்காக பட்டியலிடப்பட்டன. விருது தேர்வு கமிட்டியின் தலைவராக பிரபல நடிகை சுஹாசினி செயல்பட்டார்.

விருது தேர்வு கமிட்டி தேர்வு செய்தபடி கேரள அரசின் சினிமா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சஜி செரியன் கேரள அரசின் சினிமா விருதுகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ சிறந்த திரைப்படமாகவும், ‘அய்யப்பனும் கோஷியும்’ சிறந்த பிரபலமான திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ‘வெள்ளம்’ படத்திற்காக நடிகர் ஜெயசூர்யா சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

சிறந்த நடிகர் - ஜெயசூர்யா (வெள்ளம்)

சிறந்த நடிகை - அன்னா பென் (கப்பேலா)

சிறந்த திரைப்படம் - ஜியோ பேபி இயக்கிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

இரண்டாவது சிறந்த திரைப்படம் - சென்னா ஹெக்டே இயக்கிய ‘திங்கலச்ச நிச்சயம்’

சிறந்த இயக்குனர் - சித்தார்த் சிவா (என்னிவர்)

சிறந்த அறிமுக இயக்குனர் - முஸ்தபா (கப்பேலா)

சிறந்த இசையமைப்பாளர் - எம்.ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதயும்)

சிறந்த குணச்சித்திர நடிகர் - சுதீஷ் (என்னிவர், பூமியில் மனோகர சோகர்யம்)

சிறந்த குணச்சித்திர நடிகை - ஸ்ரீரேகா (வெயில்)

சிறந்த பிரபலமான திரைப்படம் - சச்சி இயக்கிய ‘அய்யப்பனும் கோஷியும்’

சிறந்த குழந்தை கலைஞர் ஆண் - நிரஞ்சன் எஸ் (காசிமிண்டே காதல்)

சிறந்த குழந்தை கலைஞர் பெண் - ஆரவ்ய வர்மா (பியாலி)

உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: UAE கோல்டன் விசாவுக்கு சொந்தக்காரராகும் மலையாள ஹீரோக்கள்: மம்முட்டி, மோகன்லாலை அடுத்து இம்முறை யார் யார்?