Cinema
லாபம் ரிலீஸ் தேதி எப்போது? செப்டம்பரில் பத்துதல ஷூட்டிங் - சினிமா அப்டேட்ஸ்!
கொரோனா குமார் ஷூட்டிங் எப்போது?
விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் ப்ளாக் ஹியூமர் ஜானர் படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் ஆகிய படங்கள் வெளியாகிருந்தது. ஆனால், இதில் எந்த படமும் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றியை நெருங்கவில்லை என்பதே நிதர்சனம். இதனால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கவே மீண்டும் ப்ளாக் ஹியூமர் கதையை கையில் எடுத்த இயக்குனர் கோகுல் தற்போது ‘கொரோனா குமார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சிம்புதான் படத்தின் ஹீரோ எனும் அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியாகிருந்தது. இந்த படத்திற்கான ஷூட்டிங் வரும் செப்டம்பர் 25ஆம் தேதியில் இருந்து துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 9 லாபம் ரிலீஸ்!
மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் ‘லாபம்’. இந்தப் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகளும் தீவிரமாக நடைப்பெற்றது. எதிர்ப்பாராத விதமாக இயக்குனர் ஜனநாதன் உடல்நலக்குறைவால் மறைந்து போகவே படத்தின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படத்தை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பரில் துவங்கும் பத்துதல
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்தான் பத்து தல. இந்தப் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான இசை பதிவு வேலைகளை ஏ.ஆர்.ரஹ்மான் துவங்கி விட்ட நிலையில் படத்தின் ஷூட்டிங் வேலைகளை ராமேஸ்வரத்தில் கௌதம் கார்த்திக்கை வைத்து துவங்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த மாதம் இந்த படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?