Cinema
மாஸ்டர் ரீமேக்கில் இருந்து சல்மான் விலகியது ஏன்? சீன, கொரியா செல்லும் ஹன்சிகா படம் - சினி அப்டேட்ஸ்!
1. ஓடிடி-யில் வெளியாகிறதா `சாணிக் காயிதம்'?
செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் திருடர்களாக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது, கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதனிடையே படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமெசான் ப்ரைம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
2. மாஸ்டர் ரீமேக்-லிருந்து விலகிய சல்மான்கான்!
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மாஸ்டர்’ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் நல்ல விமர்சனமும் கிடைத்திருந்தது. இதை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வந்தன, ஹிந்தியில் விஜய் நடித்த ஜேடி கேரக்டரில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஹிந்தி ரசிகர்களுக்காக இந்த கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன. ஆனால், அந்த கதையை படித்த சல்மான்கான் தனக்கு திருப்தியாக இல்லை என்று கூறி படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சல்மான்கான் கைவசம் 3 படங்கள் உள்ளன. அவற்றில் தொடர்ச்சியாக நடிப்பதும் விலகலுக்கு காரணம் என்கின்றனர்.
3. ஹன்சிகாவின் 105 மினிட்ஸ் சீனா, கொரியா ரிலீஸ்!
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக இருந்து வரும் ஹன்சிகா மோத்வானி தற்போது ஹீரோயினுக்கு முக்கியதுவம் உள்ள கதைகளாக சேர்வு செய்து நடித்து வருகிறார். விரைவில் இவர் நடித்து முடித்துள்ள ‘மஹா’ வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து ‘105 மினிட்ஸ்’ படம் வெளியாகவுள்ளது. ராஜா துசா இயக்கியுள்ள இந்த படத்தை இந்திய மொழிகள் மட்டுமல்லாது சீனா, கொரியா உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்ட இந்த படம் 105 நிமிடத்தில் நடக்கும் பரப்பரப்பான கதையாக உருவாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!