Cinema
இணையத்தை கலக்கும் STR பட ஷூட்டிங் ஸ்பாட்; OTTக்கு செல்லும் வெங்கட் பிரபு படம்!
வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து கௌதம் மேனன், சுசிந்திரன், ராம் என வரிசையாக படங்கள் நடிக்கவுள்ளார். இதில் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்புவின் புதுவிதமான தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார். இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சிம்புவின் ஜோடியாக பிரபல மராத்திய நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி லைவ்-ல் ரிலீஸாகும் கசட தபற..!
வெங்கட் பிரபு தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலங்களாக ரிலிஸுக்கு காத்திருக்கும் படம் தான் ‘கசட தபற’. நவரசா படத்தை போலவே ஆந்தாலஜி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர். இப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?