Cinema
'சார்பட்டா' வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் புது 'ஸ்கெட்ச்'... OTTயில் தஞ்சமடைந்த மலையாள நடிகர்கள்!
பூஜையோடு துவங்கிய பிரபுதேவாவின் புதிய படம்..!
நடிகர் பிரபுதேவா பாலிவுட் பக்கம் சென்றதும் அங்கு சில ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனரானார். பின்னர் மீண்டும் தமிழில் நடிகராக எண்ட்ரியானவருக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்தது. அடுத்தடுத்து இவரின் நடிப்பில் 'யங் மங் சங்', 'பொன் மாணிக்கவேல்', 'பஹீரா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
இதை தொடர்ந்து 'ப்ளாஷ் பேக்', 'மை டியர் பூதம்', 'பொய்க்கால் குதிரை' மற்றும் இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத சில படங்கள் உள்ளது. இந்த படங்களின் வரிசையில் பா.விஜய் அவர்களின் படமும் தற்போது இணைந்துள்ளது. தற்போது இவர் இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக பிரபு தேவா நடிக்க நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் பூஜையோடு துவங்கியுள்ளது.
OTT பக்கம் செல்லும் மலையாள சூப்பர் ஹீரோ படம்..!
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கைவசம் க்ரூப், மின்னல் முரளி, கானேகானே, வழக்கு, நாரடன், வாஷி, வரவு, 2043ஃபிட் என பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் இவரின் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘மின்னல் முரளி’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டோவினோ தாமஸின் ‘கோதா’ படத்தை இயக்கிய ஃபாசில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்புர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘சார்பட்டா’ இரண்டாம் பாகம் பற்றி பா.ரஞ்சித் கருத்து..!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 1970களில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமெசான் ப்ரைமில் வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். ‘சார்பட்டா பரம்பரை படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன்கதையாக வைத்து படம் எடுக்க யோசிக்கிறேன். 1925-ல் ஆரம்பிப்பதுபோல் கதை இருக்கும். இதை வெப் தொடராகவோ அல்லது திரைப்படமாகவோ எடுக்கும் எண்ணம் உள்ளது’ என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!