Cinema
”உன் இழப்புக்கு நானே காரணமாவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை” - தோழியின் மறைவால் உருகிய யாஷிகா!
மாமல்லபுரத்தில் இருந்து கடந்த 25ம் தேதி நண்பர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் காரில் அதிவேகமாக வந்துக் கொண்டிருந்த போது ஈ.சி.ஆர் சூளேரிக்காடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தால் பெரும் விபத்து நேர்ந்தது.
இதில் படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருடன் வந்த பெண் தோழி ஒருவர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது தோழி மறைந்தது குறித்து நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளது தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
அதில், “இப்போது என்னை சுற்றி நடப்பவை குறித்து என்னுடைய உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. உயிரோடு இருக்கவே குற்றவுணர்ச்சியாக கருதுகிறேன். நான் உயிரோடு இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுவதா இல்லை என் உற்ற தோழியை பறித்ததற்காக வெறுப்பதா என்றே தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் செய்கிறேன் பாவணி. என்னை எப்போதும் நீ மன்னிக்க மாட்டாய் என தெரியும். இருந்தாலும் என்னை மன்னித்துவிடு. உன் குடும்பத்தை தவிக்க விட்டதற்கு வருந்துகிறேன். உன் ஆன்மா சாந்தியடையட்டும். நீ மீண்டும் என்னுடன் வர பிராத்திக்கிறேன். உன் குடும்பமும் என்னை விரைவில் மன்னிக்கும் என்று நம்புகிறேன்.
நம்முடனான நினைவுகளை வாழ்நாள் முழுவதும் நினைத்துக் கொண்டிருப்பேன். என்னால் தான் நீ என்னோடு இல்லாமல் போவாய் எனும் நிலை வரும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆழ்ந்த இரங்கல்கள்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், என்னுடைய பிறந்தாளை ரசிகர்கள் யாரும் கொண்டாடவோ வாழ்த்துகளை தெரிவிக்கவோ வேண்டாம் என்றும் யாஷிகா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !