Cinema
இந்தி படத்தை தயாரிக்கும் சூர்யா... கோலிவுட்டில் கவனம் செலுத்தும் பிரபுதேவா..! #CINEUPDATES
பாலிவுட் பக்கம் செல்லும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மேலும் ஊர்வசி, காளிவெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்தப் படம் சூர்யாவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்போது இந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. சுதா கொங்கரா இயக்க இருக்கும் இந்தப் படத்தையும் சூர்யா தான் தயாரிக்க உள்ளார். அவரின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த படத்தை அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் தயாரிக்க உள்ளது.
கோலிவுட்டில் படங்களை குவிக்கும் நடிகர் பிரபு தேவா!
தேவி படம் மூலமாக தமிழுக்கு மீண்டும் வந்த பிரபுதேவா தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து இவரின் நடிப்பில் யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதைத் தொடர்ந்து நான்கு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி ‘ப்ளாஷ் பேக்’, ‘மை டியர் பூதம்’ மற்றும் இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத 2 படங்கள் உள்ளன.
இந்த இரண்டு படங்களை ’குலேபகாவலி’ படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் புதுமுக இயக்குனர் அமல் கே.ஜோபி ஆகியோர் இயக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இன்னும் சில படங்களில் இவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஒருகாலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்த பிரபுதேவா தற்போது மீண்டும் அந்த இடத்தை பிடிப்பாரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!