Cinema
'பாகுபலி' வெப் தொடர்-சிவகாமி தேவியாகும் இளம் நடிகை... விஷாலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்: சினி துளிகள்!
'பாகுபலி' வெப் தொடரில் ஒப்பந்தமான இளம் நடிகை...
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் மிக முக்கிய கதாப்பாத்திரமாக இருந்தது ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்திருந்த சிவகாமி தேவி தான். இந்த சிவகாமி தேவி கதாப்பாத்திரத்தின் இளமை பருவத்தில் இருந்து பாகுபலி கதையை வெப் தொடராக கொடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்த தொடரில் ராஜமாத சிவகாமி தேவியாக நடிக்கவிருக்கும் நடிகைக்கான தேடுதல் வெகு நாட்களாக நடந்துவந்தது. இதற்காக நாயகி சமந்தாவிடம் கூட படக்குழு அண்மையில் பேசிருந்த நிலையில் அவர் மறுத்துவிட்டதால் தற்போது இந்திய அளவில் பிரபலமான இளம் நடிகை Wamiqa Gabbi (வமிகா கேப்பி) சிவகாமி தேவியாக நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இவர் தமிழில் மாலை நேரத்து மயக்கம் மற்றும் இரவாக்காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷாலுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்...
நடிகர் விஷால் தனது 31வது படத்தில் கவாணம் செலுத்தி வருகிறார். புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் ஹைதரபாத்தில் நடந்து வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார்.
மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஏற்கனவே தமிழில் அஜித்தின் ஜனா, விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!