Cinema
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 'டாக்டர்'.. யுவன் இசையில் 'குருதி ஆட்டம்' முதல் சிங்கிள் ரிலீஸ்! #CineUpdates
குருதி ஆட்டம் முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!
அதர்வா நடிப்பில் அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘குருதி ஆட்டம்’, ‘தள்ளிபோகாதே’, ‘அட்ரஸ்’ என படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. இதில் ‘8 தோட்டாக்கள்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குருதி ஆட்டம்’ படம் மதுரையில் இருக்கும் கேங்ஸ்டர்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இதில் அதர்வா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி வைரலாகியிருந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிளாக ‘ரங்க ராட்டினம்’ பாடல் நாளை வெளியாகவுள்ளது. இதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
டிஸ்னியில் நேரடியாக வரவிருக்கும் சிவகார்த்திகேயன் படம்!
கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். சிவகார்த்திகேயன் ஜோடியாக தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கும் இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மார்ச் 26ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக இந்த ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் கேள்விக்குறியானது. அதனை தொடர்ந்து படம் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. தற்போது அந்தத் தகவல் உண்மையாகியுள்ளது.
‘டாக்டர்’ படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!