Cinema

அதிக தொகை கேட்டதால் படத்தை வாங்க மறுத்த SONY LIV ? : 'மாநாடு' படக்குழு அப்செட்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் படம் ‘மாநாடு’. அரசியலை மையப்படுத்திய கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சிம்பு அப்துல் காலிக் எனும் கேரக்டரில் நடித்துள்ளார். சென்னையை சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி வைரலாகிருந்த நிலையில் தற்போது முதல் சிங்கிளும் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட திட்டமிட்டு புதிதாக தமிழுக்கு வரும் SONY LIV நிறுவனத்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கு தயாரிப்பு தரப்பு கூறிய விலை 40 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது.

இவ்வளவு பெரிய தொகையை ஒரு படத்துக்கு கொடுக்க முடியாது என சோனி லிவ் நிறுவனம் மறுத்துவிட்டதாவும் கோலிவுட் வட்டரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதனால் ‘மாநாடு’ படத்தின் முதல்கட்ட வியாபாரம் தோல்வியில் முடிந்துள்ளது.

Also Read: சினிமா துளிகள் : சோனி லைவில் வெளியாகும் முதல் தமிழ்படம்.. ‘ஆன்டி இந்தியன்’ ரிலீஸில் நீடிக்கும் சிக்கல்!