Cinema
தனுஷின் ‘புஜ்ஜி’ பாடல் படத்தில் இடம்பெறாதா? ; தமிழுக்கு வரும் ‘பீர்பால் ட்ரையாலஜி கேஸ் 1’ - சினி துளிகள்
2019ல கன்னட சினிமாவில் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கி நடித்து வெளியான படம் தான் ‘Birbal Trilogy Case 1: Finding Vajramuni’. இது 2017ல வெளியான `நியூ ட்ரயல்' என்ற கொரிய படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதில் ஸ்ரீனிவாஸ் ஜோடியா ருக்மணி வசந்த் நடித்திருந்தார். ஸ்ரீனிவாஸ் வக்கிலாக நடித்த இந்தப் படம் கன்னட சினிமா ரசிகர்களுக்கு நல்ல த்ரில்லர் அனுபவத்த கொடுத்து செம ஹிட்டானது. இந்தப் படத்தோட வெற்றிய தொடர்ந்து, படத்தின் ரீமேக் உரிமையை மற்ற மொழிகளிலும் வாங்கினார்கள்.
தெலுங்கில் இந்த படத்தை ‘திம்மரசு’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்கள். டைரக்டர் ஷரன் கோபிசெட்டி இயக்கும் இந்த படத்தில் சத்யதேவ் கஞ்சரனா லீட் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான ப்ரோடக்ஷன் வேலைகள் இப்போ நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில பீர்பால் படத்தின் தமிழ் வெர்ஷனுக்கான வேலைகள் தொடங்கிவிட்டது.
டைரக்டர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்க இருக்கும் இந்தப் படத்தில் சாந்துனு லீட் ரோலில் நடிக்க இருக்கிறார், இந்த படத்திற்கு ‘மதியாளன் கேஸ் நம்பர் 1’ என டைட்டில் அனோன்ஸ் செய்திருக்கிறார்கள். க்ரிஷ் இப்போ தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்துக்கான் வேலைங்களில் பிஸியாக இருக்கிறார், அந்த படத்த முடித்ததும் மதியாளன் படத்துக்கான வேலைங்கள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் `ஜகமே தந்திரம்'. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமா தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், நேரடியாக இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் என அறிவித்தது தயாரிப்பாளர் தரப்பு. அதன்படி படம் ஜூன் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ்ல ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஏற்கெனவே படத்துக்கான டீசர், ரகிட ரகிட பாடல், புஜ்ஜி, நேத்து என இரண்டு வீடியோ பாடல்களையும் ரிலீஸ் செய்திருந்தார்கள். படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆக கம்மியான நாட்களே இருப்பதால், ப்ரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஒரு சுவாரஸ்ய தகவலை சொல்லியிருந்தார்.
படத்தில் புஜ்ஜி மற்றும் நேத்து என இரண்டு வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டது. இரண்டுமே ரசிகர்ளால் வரவேற்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு பாடல்களுமே படத்தின் புரோமோஷனுக்காக வெளியிடப்பட்டதுதான். படத்தில் இந்த இரண்டு பாடல்களும் இடம்பெறாது, அதனால் தான் பட வெளியீட்டுக்கு முன்பே வெளியிட்டோம் எனத் தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?