Cinema
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்துக்கு UA சான்றிதழ் : அதிர்ச்சியில் படக்குழு !
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'டாக்டர்'. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் இந்தப் படம், கடந்த மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், மார்ச் 9 ஆம் தேதி இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. அதில், "சாரி பாஸ்.. படம் ரிலீஸ் கிடையாது . தேர்தல்னால தள்ளிவச்சிருக்கோம். சீக்கிரமே ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம்" என சொல்லிருந்தனர்.
அதுக்குப் பிறகு, கடந்த மார்ச் 11 ஆம் தேதி, ரம்ஜான் நாளில் டாக்டர் படம் திரைக்கு வரும் என அறிவித்து மே 13 ஆம் தேதியை புது ரிலீஸ் தேதியாக அறிவித்தார்கள். இப்போது கொரோனாவால் தியேட்டர்கள் மூடிருப்பதனால் இந்த முறையும் ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது. இதற்கிடையில் கொரோனாவால் திரைதுறையில் அடுத்தடுத்து ஏற்படும் மரணம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கு.
இந்த நிலையில், எந்த செலபரேஷனும் வேண்டாம் என படத்தின் அப்டேட்ட கூட சொல்ல முடியாது என சமீபத்தில் கே.ஜே.ஆர் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்த சூழலில் இப்படத்தின் சென்சார் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி டாக்டர் படம் ‘யுஏ’ சர்டிஃபிகேட்ட வாங்கிருக்கிறது, அதுமட்டுமில்லாமல் 148 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இது உருவாகிருக்கிறது. சிவாவின் சமீபத்திய எல்லா படங்களுமே யு சான்றிதழ் பெற்று வந்த நிலையில், டாக்டர் யுஏ வாங்கியிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!