Cinema

பெரிய சாதனையை படைக்க இருக்கிறது தனுஷின் ஜகமே தந்திரம்; வெளியானது புதிய அறிவிப்பு!

தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என செம பிஸியான நடிகராகிவிட்டார் தனுஷ். இப்போது, ஹாலிவுட்டில் `க்ரே மேன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகிக் கொண்டு வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கர்ணன் படமும் செம ஹிட். அடுத்ததாக, ஜூன் 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ‘ஜெகமே தந்திரம்’ வெளியாக இருக்கு.

கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்திற்கு முன்பே இயக்கியிருக்க வேண்டிய படம் `ஜகமே தந்திரம்'தான். ஆனால், ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததும் அதை முடிக்க கிளம்பினார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தை தியேட்டருக்கு கொண்டு வரும் முனைப்பில் இருந்தது தயாரிப்பு தரப்பு, ஆனால் கொரோனா காரணமாக அது சாத்தியமாகாததால் இப்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. தனுஷுக்கு இந்தியா தாண்டியும் வரவேற்பு இருப்பது முன்பே தெரிந்ததே. கொலவெறி பாட்டின் வெற்றி ஆரம்பித்து, இப்போது அவர் நடிக்கும் க்ரே மேன் வரை உலகமெங்கும் அவரை சென்று சேர்த்திருக்கிறது.

இந்நிலையில நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனுஷுக்கு, உலக அளவில் வரவேற்பு இருப்பதை கவனித்து, கிட்டத்தட்ட 17 மொழிகளில் ஜகமே தந்திரம் படத்தை டப் செய்து வெளியிட இருக்கிறது. இதுவரை ஹாலிவுட் படங்கள் மட்டுமே பல மொழிகளில் டப் செய்ப்பட்டு வெளியாகும். இப்போது, ஒரு தமிழ்ப் படத்தை இத்தனை மொழிகளில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். நிச்சயம் தனுஷூக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் தான்.

Also Read: தோழா பட இயக்குநருடன் தெலுங்கில் கால் பதிக்கும் நடிகர் விஜய்? பரபரக்கும் தகவல்கள்!