Cinema
மொத்தமாக மூடப்படுகிறதா தியேட்டர்கள்? தள்ளிப்போகிறது டாக்டர் உட்பட அனைத்து படங்களின் ரிலீசும்! CovidCrisis
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தை, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் & சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்காங்க. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, ரிலீஸிற்கும் படம் தயாரானது.
அதன்படி, கடந்த மார்ச் 26 ஆம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், மார்ச் 9ம் தேதி இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. அதில், படம் ரிலீஸ் கிடையாது. தேர்தலால் தள்ளிவைத்திருக்கிறோம். சீக்கிரமே ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம் என சொல்லிருந்தார்கள். அதுக்குப் பிறகு, கடந்த மார்ச் 11ம் தேதியே ரம்ஜான் நாளில் `டாக்டர்' படம் திரைக்கு வரும் என அறிவித்தனர்.
அதன்படி மே 13 ஆம் தேதி இப்படம் வெளியாக இருந்தது. இப்போது மீண்டும், `டாக்டர்' படம் இன்னும் தள்ளிப் போகும் என சொல்லப்படுகிறது. போன முறை தேர்தல் காரணம் என்பது மாதிரி, இந்த முறை, கொரோனா காரணமாக திரையரங்கில் 50% மட்டுமே அனுமதி என்ற நிலை இருப்பதால், மீண்டும் படம் தள்ளிவைக்க முடிவு செய்திருக்கிறதாம் படக்குழு.
மேலும் இரண்டாம் அலைக்காக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அரசாங்கம் அறிவித்திருப்பதாலும், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் 50 சதவீத இருக்கை போன்றவற்றால் எப்படியும் புதுப்படம் வராது.
எனவே எங்களாலும் திரையரங்கை நடத்த முடியாது. இதனால் நாளை திரையரங்க உரிமையாளர்கள் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மீட்டிங் நடத்தி, திரையரங்கை மூடிவிடலாம் என முடிவு செய்யப்பட இருக்கிறதாம். எனவே, திரையரங்கை மூடுவது என்பது செயல்படுத்தப்பட்டால், டாக்டர் மட்டுமல்லாது எல்லா படங்களுமே தள்ளிப்போகும் என்பது உறுதி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!