Cinema
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... நாளை முடிவுகள் அறிவிப்பு!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கியுள்ளனர். இந்தச் சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராக உள்ளார். இந்தச் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் எவரும் இன்று நடக்கும் தேர்தலில் போட்டியிடவில்லை.
இன்று நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு 'தயாரிப்பாளர் பாதுகாப்பு அணி'யின் டி.ராஜேந்தர், 'தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி'யின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, சுயேட்சையாக பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.
மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடுகின்றனர்.
முன்பு நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?