Cinema

“மாஸ்க் அணிந்தபடிதான் படம் பார்க்கவேண்டும்” : திரையரங்குகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

இந்தியாவில் கொரோனா பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்று வரை ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகளை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளதால் திரையரங்குகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

  • சினிமா திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

  • பார்வையாளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

  • அனைவரும் மாஸ்க் அணிந்தபடிதான் படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.

  • பார்வையாளர்கள் உள்ளே செல்லும்போது அனைவருக்கும் சானிடைசர் வழங்கவேண்டும்.

  • ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு முன்பாக முழுமையாகக் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

  • ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி விட்டு அமர வேண்டும் மேலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

  • பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க அனுமதி.

  • பட இடைவேளையின் போது பார்வையாளர்கள் இருக்கைகளை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • கொரோனா விழிப்புணர்வு காணொளிகளைப் பட இடைவெளியின் போது ஒளிபரப்ப வேண்டும்.

  • திரையரங்குகளின் உள்ளே, ஏ.சியில் 24 முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான அளவை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.

  • மக்கள் ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும்.

Also Read: வருகைப் பதிவேட்டில் ஸ்ட்ரிக்ட் கூடாது; எந்நேரமும் மாஸ்க் கட்டாயம்- பள்ளிகள் செயல்பட நெறிமுறைகள் வெளியீடு!