Cinema
சுஷாந்த் சிங் மரணம் கொலையா... தற்கொலையா..? : எய்ம்ஸ் பிரேதப் பரிசோதனை மறு மதிப்பீடு அறிக்கை தாக்கல்!
சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடர்பாக எய்ம்ஸ் தனது பிரேத பரிசோதனை மற்றும் உள்ளுறுப்பு மறு மதிப்பீடு அறிக்கையை சி.பி.ஐ வசம் சமர்ப்பித்தது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மற்றும் உள்ளுறுப்பு அறிக்கையை மறு மதிப்பீடு செய்தும், மீதமுள்ள 20 சதவீத உள்ளுறுப்பு மாதிரியில் இருந்தும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் சி.பி.ஐக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இந்த எய்ம்ஸ் மறு மதீப்பீட்டு அறிக்கை ஒரு “உறுதியான முடிவு” ஆகும், இருந்தாலும் சி.பி.ஐ இதுவரை சேகரித்த ஆதாரங்களை ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவை எடுக்கும்.
இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் சுதிர் குப்தா கூறுகையில், இறுதியாக ஒரு முடிவுக்கு வரும் முன் ஆழ்ந்து ஆராய்தல் தேவை என்றார். "ஒரு தர்க்கரீதியான சட்ட முடிவுக்கு சில சட்ட அம்சங்களை ஆராய வேண்டிய அவசியம் உள்ளது" என்றும் அவர் கூறினார்.
சுஷாந்த் சிங் கொல்லப்பட்டாரா அல்லது அது தற்கொலை தானா என்று சி.பி.ஐ தம்மிடம் இருக்கும் மற்ற பல ஆதாரங்களுடன் பகுப்பாய்வு செய்து ஒரு முடிவுக்கு வரும்.
முன்னதாக, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங், எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையின்படி, நடிகரின் மரணத்திற்கு காரணம் "200% கழுத்தை நெரித்தல்" என்று கூறியிருந்தார். இருப்பினும், டாக்டர் சுதிர் குப்தா இந்த கூற்றுக்களை "தவறானது" என்று குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு செப்டம்பர் 22 அன்று சுஷாந்த் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என முடிவு செய்யவிருந்தது, இருப்பினும், விசாரணை காரணமின்றி நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் சுஷாந்த்தின் வழக்கறிஞர் விகாஸ் சிங், மரணத்திற்கான காரணம் குறித்து சி.பி.ஐ முடிவெடுப்பதில் ஏன் இவ்வளவு தாமதம், சி.பி.ஐயின் இந்த நிலை "விரக்தியை தருகிறது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "சுஷாந்த் மரணத்திற்கு பிறகு நான் எய்ம்ஸ் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு மருத்துவருக்கு சுஷாந்த் இறந்த பிறகு எடுத்த புகைப்படங்களை அனுப்பியதற்கு அவர், இந்த மரணம் 200% கழுத்தை நெரித்து கொலை செய்தது. இது தற்கொலை அல்ல என்று சில நாட்களுக்கு முன்பே என்னிடம் சொன்னார்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 14 ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை வீட்டில் இறந்து கிடந்தார். மும்பை காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் படியும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படியும் மரணத்திற்கான காரணம் தூக்குப்போட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் மரண வழக்கின் கோணத்தை சரியாக விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவர்களுடன் சி.பி.ஐயின் (Special Investigation Team) சிறப்பு விசாரணைக் குழு நெருங்கிய தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!