Cinema
என் வீட்டிலிருந்து எடுத்த போதைப் பொருள் ரியாவிற்கு சொந்தமானது - நடிகை ரகுல் பிரீத் சிங் வாக்குமூலம்..!
இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்தநிலையில் ரியா போதை பொருள் உபயோகப்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து ரியாவை கைது செய்தனர்
இதன் தொடர்ச்சியாகப் போதை கும்பலுடன் கைப்பேசி மூலம் தொடர்பில் இருந்தாக நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று என்.சி.பி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ரகுல் ப்ரீத் சிங்கின் வாக்குமூலம்:
இந்த நிலையில், சிறையில் இருக்கும் தனது தோழி ரியா சக்ரவர்த்தியுடன் போதை தொடர்பான உரையாடல்களை நடிகை ராகுல் ப்ரீத் சிங் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணிக்கத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளார். என்.சி.பியின் தகவல்படி, ரியாவுடன் பேசிய வாட்ஸ்அப் உரையாடல்களை ரகுல் உன்மை என்று உறுதிப்படுத்தியதோடு, அந்த போதை மருந்துகள் ரியாவுக்கானது என்று கூறியுள்ளார்.
தனது வாழ்க்கையில் எப்போதும் போதைப்பொருளை உட்கொண்டது இல்லை என்றும் ரகுல் கூறியுள்ளார். ரகுல் ப்ரீத்தும் ரியாவும் தோழிகளாக இருந்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் பெரும்பாலும் ஜிம்ம்களுக்குச் ஒன்றாகச் சென்று வருவர் இதன் காரணமாகவே ரகுலின் பெயர் இந்த வழக்கில் அடிப்பட்டுள்ளது. இப்போது என்.சி.பியுடன் இருக்கும் ரியாவின் வாட்ஸ்அப் உரையாடலில் அவரது பெயரும் இருந்துள்ளது.
மேலும், ரகுல் பிரீத் சிங் கூறியதாவது தனது வீட்டில் இருந்த போலீசாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் நடிகை ரியா சக்ரவர்த்திக்குச் சொந்தமானது என்றும் அவர் அதைத் தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள இருந்ததையும் ரகுல் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ரகுல்பிரீத் சிங் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் துருவித் துருவி கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்.
விசாரணைக்குப் பின்னர் என்.சி.பி அதிகாரிகள் கூறியதாவது: விசாரணையின் போது, போதைப் பொருள் பரிமாற்றம் பற்றி நடந்த வாட்ஸ் அப் உரையாடல் பதிவைக் காண்பித்து விசாரித்தோம். நடிகை ரியாவுக்கும், ரகுல் பிரீத் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடல் உன்மை என அவர் ஒப்புக் கொண்டார்.
Also Read
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !